விழிப்போம்

பறக்கும் வாகனங்களில்
மின்னல் போல்
பறக்கும்
செயின் திருடர்கள் !

விலாசம்
விசாரித்து
வினாடியில் நகை பறிக்கும்
வித்தகர்கள் !

சேலையை
பறக்க விடாதீர்கள்!
விழிப்புணர்வோடு
செயல்பட்டு
விரட்டுங்கள் வழிப்பறியர்களை!

தாகம் என
தண்ணீர் கேட்டு
தடுமாற வைக்கும்
திருடர்கள் !

திசை திருப்பி
திசை தெரியாமல்
ஓடும் சூட்சமகர்கள் !

மன பக்குவம்
மனோ தைரியம்
மருள வைக்கும்
வழிப்பறியர்களை !

பெண்களே
பெண்மையுடன்
கனிவாய் நடை போட்டு
விழிப்புணர்வோடு
சாட்டையடி கொடுங்கள் !
சாலை பறியர்களுக்கு !

சிந்தனையை சிதற விதாது
பொன்னான சேமிப்பை
சேமியுங்கள் !

சாலையில்
போகும் திசைக்கு
எதிர் புறம் செல்லுங்கள்

சாலையில் தனியாய்
நடக்க முன் வந்தால்
தற்காப்பிற்கு
கத்தியை எடுத்து செல்லுங்கள் !

அருகில் இருக்கும்
வீட்டிற்க்குள்
நுழைந்து விடுங்கள் !

நகைகளை
வெட்ட வெளிச்சமாய்
அணிவதை தவிருங்கள் !

விழிப்போடு செயல்படுங்கள் !

எழுதியவர் : kirupaganesh (2-Mar-15, 10:54 pm)
பார்வை : 125

மேலே