பின்னிரவு நொந்தவனம்

தெருவுக்குப் பண்ணன்டுன்னு
விடியக் கூறுக்கெல்லா
கூவிக்கிட்டுத் திரியுதாமா
நேந்துவிட்ட சேவலுகல்லாம்....

சொப்பனத்துல அய்யஞ்
சொல்லிருச்சின்னு.... சித்திரையிலேயே
பச்ச பரப்புறதா
சேதி யறிவிக்கச் சொல்லிருந்தாக....

மாடனுக்கும்.. மாகாளிக்கும்
தனியடப்பு...
கருப்பருக்கு தென்னம்பாள
கோபுரக்கூண்டு... அய்யனுக்கு
பனங்குருத்து வீடு....

ரெண்டாவது வரிசை
அடைக்கயில... கருக்கு கிழிச்ச
ரத்தத்த
தேயிலப்பொடி ..... இழுத்துக்கிரும்...

இப்படியா செறப்பா
சிங்காரிச்சி முடிச்ச ஒரு
பௌர்ணமி நாளன்னிக்கி...
தடபொடலா யெறங்கிருந்தாரு..
அய்யஞ் சாமி....

இந்தவாட்டி பூசாரியோட
ரெண்டாவது மயம்மேல....

மழைத்தேதி....! மச்சுவீடுத்
தேவரு மக மாங்கலியம்...!!
தெக்குத்தெரு பூவரசம்மரத்துலயும்
நானிருப்பெம்.... இப்படியா
ஊருக்கெல்லாம் வாக்கச் சொல்லி...

இந்த வருசமும் ...
களத்துக்கு பொறத்தால நின்ன
எஞ் சனத்துக்கு மட்டும்....
விபூதி போடாமலேயே
மலையேறிப் போச்சி....!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (28-Feb-15, 11:37 pm)
பார்வை : 296

மேலே