தூக்கம் சிதைத்தாள்

நீக்கமிலா அழகியவள் தேகம் நித்திலம்
பாக்கள் வடிக்கப் பக்கம் சென்றேன்
பூக்கும் இதழ்களால் புன்னகை பெய்தாள்
யாக்கும் வரிகளின் அமர்வினைக் கொய்தாள்
ஏக்கம் உறைத்தாள் வேகம் நிறைத்தாள்
பார்க்கும் இடமெலாம் அவள் உருவம்
தூக்கம் இல்லையே நினைவால் துளியும் கண்ணிலே
அஷ்றப் அலி