Anithbala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Anithbala |
இடம் | : இந்தியா(சென்னை). |
பிறந்த தேதி | : 05-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 753 |
புள்ளி | : 159 |
வாழ்க்கையை
மற்றவர் படிக்கும்படி அல்லாமல்
எனக்கு பிடிக்கும்படி
வாழ முயல்கிறேன்...
மற்றவருக்காக
என்னை மாற்றிக்கொள்வதும்
மனதை மாற்றிக்கொள்வதும்
ஒன்றுதான்...
இரண்டுமே எனக்கு வேண்டாம்...
மற்றவருக்கு கொடுக்க
என்னிடம் ஏதுமில்லாதபோது,
மற்றவர் பொருளைப்பெற
எனக்கு தகுதியில்லாது போகும்..
@அனித்பாலா.
E-mail : technobalan@gmail.com
contact: 9790688694
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
♥️என் இதயத்தை இழக்கத்தொடங்கினேன்!
நான் உன்னை முழுமையாக நேசிக்க தொடங்கியபோது!💙
மனிதன்,
மனிதம் என்பதன்
புனிதம் உணர மறந்துபோனான்...
தான் வாழ
மற்றவரை கெடுக்க
பழகிவிட்டான்...
ஒரு வேலை தவறினால்
மன்னித்து மறந்துவிடலாம்...
மன்னித்துவிடும் இந்த உலகம்
என்ற போதையில்
ஓயாமல் தவறுபவனும்
அதனை மன்னிப்பவனும்
மண்ணைக் கெடுக்கும் மாக்கள்தான்...
இப்படியே போனால்
விடிவுக்கு வராத உலகிற்கு
முடிவுதான் வரும்...
-இப்படிக்கு ஒரு தமிழன்...
இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை
வரவேற்க வாய்க்காத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்,
பசியாற்றும்
அடுப்புகளின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது..
கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது.
இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும் வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது.
நோயாளிகளின்
விடாத இருமலாகவும்
அரைகுறை மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாகவும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை,
இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்
எரியும் வயிற்றை அணைக்கும் விறகு -
பசியை விற்கும் பாமர கூட்டம் -
பட்டா போட்டு பங்களா கட்டுது
காட்டை வேட்டையாடும் பணக்கார புலிகள் -
படம் வரைந்து புள்ளியியல் போடுது படித்த கூலிகள் -
வனத்தை அழித்து வாழுமிடம் அமைத்து - கூடுகள் கலைத்து குளிர் தேட மலை முடி தொடும் மூடா - எந்த மிருகத்திடமும் இல்லை இந்த மனிதத்தனம் -
புலிகள் கண்டு கிளிகள் கொண்ட தேயிலைத் தோட்ட சருகுகளை - எலி என்று புலி தின்று போனதே - புரியவில்லையா புதிரென்று இயற்கையை -
பசுந்தோல் போத்தி மனித சதை தின்னும் மானிடா- மன்னிக்காது இயற்கையும் உன்விளையாட்டை -
கைகோர்க்குது கரை வேட்டியும்
கருப்பு பண புள்ளியும் - மலையெல்லாம்