sukhanya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sukhanya
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  17-Feb-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2012
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  65

என்னைப் பற்றி...

...

என் படைப்புகள்
sukhanya செய்திகள்
sukhanya - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 9:48 pm

வேண்டா குப்பையுள்
வேண்டிதேடுகிறேன்
தொலையாத என் வாழ்வை
கேளி நிறைந்த உன் கண்கள்
ஏளனமாய் சொல்லுது
குப்பையுள் மனித குப்பை
உணர்வுகள் உரைந்தது
நவரசம் மறைந்தது
வசைபாட ஒன்றுமில்லை
தூக்கியெறிந்த குப்பையுள்
விழுந்த குப்பை நான்....

மேலும்

அருமை 06-Feb-2018 5:32 pm
குப்பை பொறுக்குபவர்கள் உண்மையில் குளத்து மீனைப் போலத்தான் இச்சமூகக் குளத்தையும் சுத்தப் படுத்துகிறார்கள் ........என்பதை உணரவைத்த படைப்பு ...... 20-Jul-2014 3:59 pm
sukhanya - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 9:44 pm

உரத்த குரல் உறங்கிப்போய்
மௌனமாய் நான்........
ஒற்றை சொல் பதில்
மெல்லிய புன்னகை
வேண்டும் தூக்கம்
வெறுக்கும் உணவு
குளிர் நிலவாய் சூரியன்
ஓய்வெடுக்கும் காற்றாடி
களைந்த அறை
முகம் பார்க்கும் கண்ணாடி
விழி பார்க்கும் கண்ணாடி
தொலைத்த இயல்பு
மாற்றங்கள் உன்னாலே
----- காய்ச்சல் 102 °F

மேலும்

கவிதை நன்று. 20-Jul-2014 5:35 pm
நன்று தோழி!! 20-Jul-2014 4:57 pm
get well soon ! கவிதை அருமை ............. 20-Jul-2014 4:09 pm
காய்ச்சலை புதுமையான கோணத்தில் அணுகியுள்ளது கவிதை .....நன்று ! 20-Jul-2014 4:00 pm
sukhanya - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 9:21 pm

மாலை மங்கும் நேரம், களைத்துப்போய் இருந்தும் விரைந்தேன் விடுதி நோக்கிய இரயில் பயணத்திற்காக.............. கொஞ்சம் கோபம் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் சோர்வு......... ஒரு நொடி தாமதம்தான் , ஓடி வந்தும் இரயிலை பார்க்க மட்டுமே முடிந்தது.காத்திருக்கும் வேலையில் என் தோழியும் வந்துவிட்டாள். அப்பாடா பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கு , மனம் சொல்லிக்கொண்டது.இரயில் வருவதை கவனிப்போமா என்பது போல் பேசிக்கொண்டே இருந்தோம்.இமயம் உயரத்தையும் தாண்டிய கோபம், வார்த்தைகள் கொந்தளிக்க திட்டினேன் . என் வயது தான் எனது அலுவலகம் தான், ஓடிய இரயிலில் ஏறி உயிரிழந்த அந்த அறிவிழந்த அரிவை. என்ன தான் அவசர உலகமோ? இரயில் போனால் வரும் , உயி

மேலும்

sukhanya - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2013 9:54 pm

நீள் வானாய் நிறைந்தவள்,
என்னுள் எழுந்து
எழுத்தாய் மாறாது
கருமேகம் ஒளித்த
மழைத்துளி ஆனாள்..............

காரணம் கேட்க
பொய் உரைத்தாள்........

ஓடும் நேரம் விரைந்து
ஒரு நொடியும் சிக்காது
கால ஓட்டத்தின் மாற்றத்தில்
மனித இயந்திரமாய்
மாற்றங்கள் நிறைந்து
ஊமை ஆனதாய்
என் எழுத்துக்கள்.........................

சிந்திக்க சொல்ல
உண்மை உரைத்தால்
மதிகெட்ட மூடன்
அந்த சோம்பல்
காரணமென்றாள்.............

விலகி போகச் சொல்ல
விழித்துக்கொண்டாள்
ஊற்றெடுக்கும் எண்ணங்கள்
எழுத்தாய் பதிவானது..................................

மேலும்

அருமை !! 30-Nov-2013 10:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே