கார்த்திக் சரவணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக் சரவணன்
இடம்:  கொளப்பள்ளி
பிறந்த தேதி :  01-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2015
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  47

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி மற்றவர்கள் நல்லதாக சொல்லும்படி நடக்க முயற்சித்துக் கொண்டே இருப்பவன்...

என் படைப்புகள்
கார்த்திக் சரவணன் செய்திகள்
கார்த்திக் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2015 11:17 am

என்
வீட்டுப்பக்கம்
ஒருமுறையாவது
வந்து போயேன்..

நிலவைத்
தொலைத்த
துக்கத்திலிருக்கிறோம்
வானும்
நானும்...

மேலும்

கார்த்திக் சரவணன் - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2015 1:43 pm

விடியும்வரை காத்திருந்து..
விடிந்ததும்..
உரங்கிவிடுகிறது நிலவு
காத்திருந்த கனவைக்காண..
கனவில்வரும் காதலைக்காண

மேலும்

கருத்து தந்து ஊக்கம் தந்த தோழமையே நன்றி 29-May-2015 1:43 pm
அருமை நண்பா.... 29-May-2015 1:05 pm
கருத்து தந்து ஊக்கம் தந்த தோழமையே நன்றி 23-May-2015 6:05 pm
அழகு !! சிந்தனை சிறப்பு !! 23-May-2015 5:04 pm
கார்த்திக் சரவணன் - Mahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2015 11:00 am

'சொல்லாமல் வந்ததில்
சிலிர்த்துப் போவானோ'

மனதில் கொஞ்சும்
இனிய கேள்வியோடு
சில நிமிட என் காத்திருப்பில்
நீ வரவும்

‘ம்ஹும்..
ஒரு சிலிர்ப்பும் தெரியலையே
ஏன் வந்தேனென்று நினைக்கின்றானோ’

சந்தித்த
ஐந்தாவது நிமிடத்தின் முடிவினில்

“உனக்கு வொர்க் ஏதும் இருக்கா”

“கொஞ்சம்ம்ம்ம்.." என்று நீ கொஞ்சவும்

மனதினில் தோன்றிய
கடுப்பை வெளிக்காட்டி கொள்ளாமல்

“உன்னோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்”

"ஓ, இன்னும் பத்து நிமிடம் இருக்கலாம்"

உன் தாராராளள பதிலில்
மேலும் கடுப்பாகி
நான் முறைக்க

“ஜிமிக்கி அழகா இருக்குடா”
சிரித்தபடி நீ சொல்லவும்

“ரொம்ப முக்கியம் இப்போ...”

மேலும்

சொல்லப்படாத பயணங்கள் தரும் பல பாடங்கள் தேனாய் தித்திப்பாய் அமைந்திட வாழ்த்துகிறேன்... 29-May-2015 1:02 pm
மிக்க நன்றி தோழி ரசித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும்... 23-May-2015 12:25 pm
ரசித்தமைக்கு நன்றி தோழி... 23-May-2015 12:24 pm
அழகு அழகு 23-May-2015 11:26 am
கார்த்திக் சரவணன் - Mahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2015 11:00 am

'சொல்லாமல் வந்ததில்
சிலிர்த்துப் போவானோ'

மனதில் கொஞ்சும்
இனிய கேள்வியோடு
சில நிமிட என் காத்திருப்பில்
நீ வரவும்

‘ம்ஹும்..
ஒரு சிலிர்ப்பும் தெரியலையே
ஏன் வந்தேனென்று நினைக்கின்றானோ’

சந்தித்த
ஐந்தாவது நிமிடத்தின் முடிவினில்

“உனக்கு வொர்க் ஏதும் இருக்கா”

“கொஞ்சம்ம்ம்ம்.." என்று நீ கொஞ்சவும்

மனதினில் தோன்றிய
கடுப்பை வெளிக்காட்டி கொள்ளாமல்

“உன்னோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்”

"ஓ, இன்னும் பத்து நிமிடம் இருக்கலாம்"

உன் தாராராளள பதிலில்
மேலும் கடுப்பாகி
நான் முறைக்க

“ஜிமிக்கி அழகா இருக்குடா”
சிரித்தபடி நீ சொல்லவும்

“ரொம்ப முக்கியம் இப்போ...”

மேலும்

சொல்லப்படாத பயணங்கள் தரும் பல பாடங்கள் தேனாய் தித்திப்பாய் அமைந்திட வாழ்த்துகிறேன்... 29-May-2015 1:02 pm
மிக்க நன்றி தோழி ரசித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும்... 23-May-2015 12:25 pm
ரசித்தமைக்கு நன்றி தோழி... 23-May-2015 12:24 pm
அழகு அழகு 23-May-2015 11:26 am
கார்த்திக் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:05 pm

கரைத்தட்டிய ஆறு
கைக்கட்டி ஓடையானதால்
ஒதுங்கிய
ஒற்றைப் படகினுள்
மெல்ல அசைகிறது கடல்.

தூரத்து கலங்கரை
மறைந்த பொழுதுகள்
மறக்காத வழிகள்
கடந்திட்ட கணங்கள்
கடக்காத கனவுகள்
உற்சாக மனிதர்களென
தன்னுள் புதைத்துக்
காத்திருக்கிறது
தனக்கான
காலத்திற்காக...

வருமா? வராதா?
வலியின் வலி
வழிகிறது விழிகளில்...

மனதில்லா மனிதனாய்
கடந்திடும் பொழுதில்
சற்றேத் திரும்பி
சலனமில்லா
பார்வைக் கூடப்போதும்

ஊருக்குள் ஓடியாடி
காலத்தின் கணமேறி
ஒற்றையாய்
ஒதுங்கி நிற்கும்
மனிதனையும

புரிந்துக் கொள்ள...

மேலும்

அருமை கார்த்திக்.. 09-May-2015 4:24 pm
ஆஹா.. மிக அருமை நண்பரே... வாழ்க்கை கவிதை வாழ்கையை சொல்லி தருகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:09 pm
கட்டாரி அளித்த படைப்பில் (public) Indhu Dear மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2015 9:28 pm

ஒங் காதுல ஈயத்தக் காச்சி
ஊத்த..... வாடி....
பேத்திக்கு பேன் பார்த்துவிட
அழைத்துக் கொண்டிருந்தாள்
பாட்டி....

கரும்பு இரும்பு கணக்கா
வந்திருக்கண்ணே..
கணுக்கால் சேறு கழுவிக்கொண்டே
காலைச் சோறுக்கு
வந்திருந்தார் சித்தப்பா.....

செப்புக் கொடத்துல
சின்ன இடுப்புல.... வாய்க்காலோரம்
சிலேடைபாடி
வம்பளத்திருந்தான் முறைமாமன்..

அம்மாடி.... அந்த
வெங்கல வெளக்க ஏத்துடா...
புதுமணப் பெண்ணிற்கு
கனிவாய்ச் சொல்லிகொண்டிருந்தார்
தாய்மாமன்...

முற்றத்துப் பத்தாயத்தில்
எப்பொழுதும்
மஞ்சளாய் நிறைந்திருக்கும்
நெல்லுமணி...

வளமாகவே வாழ்ந்திருந்தோம்
அட்சய திரிதியை
இல்லா நாட்கள

மேலும்

//வளமாகவே வாழ்ந்திருந்தோம் அட்சய திரிதியை இல்லா நாட்களிலும்...// மிக மிக அருமை நண்பரே... 04-Jul-2015 12:14 am
அட்சய திரிதியை நம் பண்பாட்டு பண்டிகையா ? தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்... தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. 27-May-2015 9:13 am
ம்ஞ்சள். நிறத் தங்கம் மட்டுமல்ல, மஞ்சள் நிற நெல்மணியும் சேர்வது அட்சையத் திரிதியைக்கு வளம் சேர்க்கும். 27-May-2015 8:22 am
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே...!! 21-May-2015 10:43 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) agan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2015 7:07 pm

ஊமை நிலவினில் ஒளிமழை
உயர்சிக ரங்களில் பனிமழை
வானில் சேனைகள் மோதிட
முழங்கி வருவது இடிமழை

சாரலும் தூறலும் மழையெனும்
சுந்தரக் கவிதையின் சந்தங்கள்
மீறலும் மாற்றங்கள் கூறலும்
புதிய கவிதையின் சொந்தங்கள்

கூரையில் குளம்படி ஓசைகள்
கிளைகளில் சிலிர்த்திடும் ஆசைகள்
துளிதுளி துளிதுளி துளிகளாய்
இலைகளில் சிந்திடும் கவிதைகள்

உறவுகள் தானே பூமழை
உள்ளத்தில் பெய்திடும் மாமழை
கலவரம் போல்வரும் பேய்மழை
கவலைகள் மறந்தால் பொன்மழை

மோகங்கள் உச்சி முகர்ந்திடில்
முத்தங்கள் மழையாய் பெய்யுதே
வானுக்கு மண்மீது மோகமே
மழை நூற்களால் நெய்யுதே

மனசின் மழையோ கண்ணீர்?
மேகத்தின் கண்ணீர் மழையோ?

மேலும்

மழையில் நனைவதை விட சாரலில் சிலிர்த்திடவே விரும்பியவன். அவ்வப்போது இது போன்ற கவி மழையிலும் நனைகிறேன்... நன்றி தோழா... 28-Apr-2015 8:11 pm
மழை என்பதே ஒரு இசை மழை என்பதே ஒரு தாளம் மழை என்பதே ஒரு சங்கீதம் மழை என்பதே ஒரு சந்தம்... இப்படி மழையே ஒரு சந்தமாக இருக்கும்போது மழைக்கே ஒரு சந்தமா? அருமை தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Apr-2015 2:19 am
ஐயயோ.. என்னங்க நீங்க மேகம்னுலாம் சொல்லிகிட்டு.. கூச்சமா இருக்கு.. அன்புக்கு மிக்க நன்றி.. பத்து நிமிடத்தில் அழகாக இதமாக பெய்திருக்கிறது.. 27-Apr-2015 10:02 pm
கவிதை படித்தேன் ...கண்ணுக்குத் தெரியாத ஒரு இசை என் மீது பொழிந்து கொட்டியது .......! பழைய தென்றல்தான் .....ஆனால் வீச வீச சுகம்தானே ......! மிக அருமை அய்யா 27-Apr-2015 6:40 pm
கார்த்திக் சரவணன் அளித்த படைப்பை (public) மணிமேகலை பூ மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Apr-2015 2:58 pm

இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

வரவேற்க வாய்க்காத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்,

பசியாற்றும்
அடுப்புகளின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது..

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது.

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும் வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது.

நோயாளிகளின்
விடாத இருமலாகவும்
அரைகுறை மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாகவும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை,

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்

மேலும்

நன்றிகள் பல நண்பரே... 21-May-2015 4:38 pm
சாரலை நனைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ... 21-May-2015 4:38 pm
நன்றிகள் நட்பே... 21-May-2015 4:37 pm
அருமை தோழர்...சிறகுகளை நனைத்து பசியால் காய வைத்தல்...ஒரே சமயத்தில் இருமலாகவும் அரைகுறை மருத்துவனின் கல்லாபெட்டி நாணயமாகவும்... அருமை.. 20-May-2015 6:42 pm
கார்த்திக் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2015 11:48 am

என்னுடன்
நீ
இருக்கும் பொழுதுகளில்
தாறுமாறாய்
தடதடக்கிறதென்
கைக்கடிகாரமும்
என் இதயத்தைப்
போலவே….

மேலும்

நன்றிகள் நண்பா.. 28-Apr-2015 8:00 pm
கவிதை நன்று தோழரே! 28-Apr-2015 3:14 pm
கார்த்திக் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2015 11:43 am

"போய் வா"
என்னையும்
புரிந்துக்கொள்கின்ற
கணத்துக்காகவும்
உனக்காகவும்
காத்திருக்கிறேன்
என் காதலோடு..
----------------------------------------------------
தயவு செய்து
என் காதல்
மரணிப்பதற்குள்ளாவது
என்னைப்
புரிந்துக்கொள்ள
முயற்சி செய்யேன்...
----------------------------------------------------
விளங்காத
பொழுதிலும்
விளக்கிடவே
முயல்கிறேன்,
முயன்றும்
தோற்கிறேன்
தோற்றும்
முயல்வேன்
கரம் கோர்க்கவே
துடிக்கிறேன்
துடிதுடித்தே
துவல்கிறேன்...
----------------------------------------------------
எனக்கும்
என் தனிமைக்கும்
நடுவே
நிரப்பப்படுகின்றன
வெற்றுப்பக்கங்களால்...
நிரப்பப்

மேலும்

கார்த்திக் சரவணன் - கார்த்திக் சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2015 3:14 pm

தெரியும்
தெரியாதென்ற
தெளிவில்லா
பொழுதொன்றில்
நிலவில்லா வானம் போல்
தனித்தேக் கிடக்கிறோம்
நானும் என்
தனிமையும்...

சுமந்து நிற்கும்
பொழுதுகளில்
சுகமாகவே இருக்கிறதென்
தனிமை

நினைவு சுமந்து
கர்ப்பமாகி
கலங்கி நிற்கையில்
உணர்கிறேனென்
முதுமையை.

கனவு கலைந்து
கர்ப்பம் கலைத்து
கலங்கி நிற்கையில்
உணர்கிறேனென்
வெறுமையை.

எனக்கென நானிருக்கும்
எல்லாப் பொழுதிலும்
என்னை நீங்கி
என்னைச் சேர்வது போல்
உனக்காய் நானிருக்கும்
உண்மைப் பொழுதுகளில்
உன்னுருத் தின்றுவிட்டு
ஊமையாய் நிற்கிறத்தென்
தனிமை...

நீ
வரும் திசைநோக்கி
விழி வைத்து
வாடி நிற்கையில்
சட்டென விழுங்கி விடுகி

மேலும்

கார்த்திக் சரவணன் - கார்த்திக் சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2015 3:16 pm

தனித்திருக்கும்
பொழுதுகளில்
தட்டிக்கொடுக்கின்றன
உன்னுடனிருந்த
ஊமைப்பொழுதின்
நினைவுகள்

பழகிய
நாட்களை விட
பார்த்த நாட்களில்
அதிகம்
தொலைந்தவன்
நான்.

கனவுகளுக்கும்
வண்ணமடிக்கும்
உன்னுருவம்
ஏனோ?
கருப்பு வெள்ளையாய்..

நினைவுகளில்
நீ வந்து
தட்டிச் செல்வதே
வரமெனில்
நினைவுகளுடன்
காத்திருப்பதே
தவம்...

கனவுலகில்
கைப்பிடித்து
காததூரம் நடப்பவளே!
நினைவுலகில்
நேரில் வந்து
நெருங்கி நிற்க மாட்டாயா?

உன்னுடன்
பேசி
நடந்து
ஓடி
பாடி
ஆடி
சிரித்து
அழுதிடும் பொழுதுகளில்
நானுமிங்கு நீயாகிறாய்
ஆக்கி விடுகிறாய்....

என் சுவாசமே!
காற்றில் கரைந்தாலும்
காற்றே கரைந்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
Indhu Dear

Indhu Dear

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

Mahalakshmi

Mahalakshmi

Coimbatore
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
மேலே