குறிஞ்சிவேலன் தமிழகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குறிஞ்சிவேலன் தமிழகரன்
இடம்:  கடாரம்
பிறந்த தேதி :  10-Nov-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2015
பார்த்தவர்கள்:  844
புள்ளி:  97

என்னைப் பற்றி...

என் இறுதி மூச்சுக்கு முன் என்னை அறியாமல் உயிரை விடேன்...

என் படைப்புகள்
குறிஞ்சிவேலன் தமிழகரன் செய்திகள்
குறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2016 12:47 pm

வங்கம்பால் சங்கமித்த
உறவுகளை..
தங்கம்போல் பங்கமற்ற
நினைவுகளை..

அங்கத்தால் தாழிடுதல்
ஏங்கலின் அழைப்பிதழே..
சுங்கம் விதைப்பது
சுரங்கமே கண்ணீருக்கு...

தாழிக்கு தாலி
தாளித்தல்...
அவமானமோ..
தாலிக்கு தாழி
தாளித்தல்
அடையாளமோ...

தாமரைத் தாளிகையே..
வாஞ்சைத் தாலி என்கையே..
எருத்தில் ஏறும் எமனல்ல-இது
பூக்கரத்தில் சூடும் பூங்காவனம்..

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 8:49 am
தாலியின் அருமை அருமை... வாழ்த்துக்கள் ..... 29-May-2016 1:17 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-May-2016 9:40 pm

அடுப்பங்கரை துறந்தே-நல்
அலுவலகம் நுழைந்தாள் ;
ஆங்கும், வன்புத்தி கொள்,
ஆணிருக்க, ஐயோ என்றாள் !

இச்சைதரு விசமிகள் கண்டே,
இவ்வுலகு நொந்தாள் ;
ஈயார் வாயில் பணியமர்ந்தே,
ஈர நாவில் அரிசியானாள் !

உறவுகள் யாவும்-முகமுடி
உதிர்க்க, உறைந்தாள் ;
ஊரார்வாய் விழுந்துவிழுந்து,
ஊனம் தரித்தாள் !

எச்சைசொல் வந்துவந்து விழ, .
எகிறிஎகிறி அழுதாள் ;
ஏற்றமிகு வாழ்க்கை-காணா
ஏங்கி ஓய்ந்து போனாள் !

ஐந்திணை எங்கிலும்-ஒருபிடி
ஐயமே கொண்டாள் !

ஒன்றுவழி பிறந்திடுமென-உயிர்
ஒட்டிக் கிடந்தாள் ;
ஓரெழுத்து, பிழை நீயென-அசரீரி
ஓசைஎழ, உடைந்தாள் !

ஔவியம்சூழ் உலகென்றே-நல்
ஔடதம் தேடி விரைந்தாள் !

மேலும்

மிக்க நன்றி 16-May-2016 8:23 pm
மிக்க நன்றி 16-May-2016 8:23 pm
அருமையான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:41 am
பொன் சேரும் செப்பினைப் போல பெண்மையில் ஆண்மை கலக்குமெனில் பெண்ணியம் மிளிரும் காலந்தனில் காலாவதியாகா.. கடிகாரம்! கவியருமை தோழமையே!! 09-May-2016 5:47 am

வஞ்சகப் பாத்திரங்கள் மிஞ்சும்
பாத்திறங்கள் கொஞ்சும் பண்
இசை விசைக்கும் சங்குச்
சத்தமே- வெள்ளையன் மூன்றாம்
விதி வடிக்கும் மதிசாரியக்கமே..!!

அறிவாயோ என்னை?
அரிவேன் அடியேன்-
உன்னை...!!
என்னை அறிந்தால்!!!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:34 am

பிரிவினிலே அருமைதனை உணர்ந்தோம்
பிறிதொரு புடைசார் அளைத்தோம்
உறவினை ஊழ்வினைபால் இழந்தோம்
தேம் சிந்தினோம்.. பின்சிந்தித்தோம்

சங்கமித்தவுழைகளை களை செய்தோம்
புறங்காட்டிய புன்னகைவழி விழுந்தோம்
ஓமென்று ஓராயிரமுறை ஒப்புவித்தோம்
ஊடல்கூடல் அணுகி உயிர்செய்தோம்

கலவிபின் கடைநிலையில் காதல்
நொறுங்கும் துண்டுகளாய் தெறிக்க
நாளங்களும் நரம்புகளும் உணர்ச்சிகளும்
துரோகமிழைத்தை உணரும் உணர்வுகள்

என்பால் உன்பால் நம்பால்
அன்பால் கண்பார்த்ததெதுவும் கானல் நீர்
மெய்யென்ற வாடகைக்காரன் பொய்
சொன்ன கதையுதுவோ என்றெண்ணி
பிரிவினிலே அருமைதனை உணர்ந்தோம்...

மேலும்

அருமை தோழமையே!!! 18-Mar-2016 3:48 pm
குறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2016 10:19 am

கனாக்களில் நீயிட்ட கன்ன முத்தங்கள் கண் திறந்தும் காயாதிருந்ததே...
என் வாய்விளிம்பில் ஒழுகியபடி உயிருடன் இணைந்த உன்னுயிரின் ஈரங்கள் எனக்கு இன்னொரு ஜென்மம்
தந்தளித்தது..

நான் தத்தளிப்பது..
தள்ளிவிட்டது.. தேக்கி வைத்தது..
என்னை தத்தெடுத்தது..
உன் தூய அன்பின் சாசனங்களோ..?

விழுகிறேன்..விழுந்தேன்...
தெளியும் முன் மீண்டும்
கலைகிறேன்..
கரைகிறேன்..
கசிந்தேன்..
கனிந்தேன்..

கருத்தரித்தேனே..
இனி நானும் தாயா??
இல்லை தாய்மையுணர்ந்த
சேயா??
இந்த விழுமங்கள் விழைந்த
இருதய..இரு இதய
வானவில் நிறங்கள் வரையும்
வசந்த ஓவியம்...
காதல்....!!

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2016 11:01 am

வீரன்

இள ரத்தம்
எழுச்சியின் சிகரம்
கல்லுடன் நடந்தால்
சொல்லுடன் செதுக்கப்பட்டிருக்கும்

நாளைய விதிகளை
படிமம் காட்டும் சுடரொளி
எழுத்தாளன்,ஓவியன்
சிற்பி,சுமைதாங்கி

தாயின் பாதத்தில்
புன்னைகையரசன்
தாயை பகைத்தவனுக்கு
புறநானூற்றின் போரரசன்

காதலின் வகைகளில்
வலையினில் நீர்மம்
வளையலில் திடம்
உண்மைக்கு மட்டும் இடம்

நேரம் உயிரன்றோ
நேர்த்தி கொள்வான்
நேசம் வேசமெனில்
விலகி செல்வான்

வாள் ருசி காணும்
சதைகளின் பங்கு
இந்த வரையறை இயற்றும்
மாமனிதனுக்கு இல்லை...

மேலும்

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழரே :) 21-Sep-2015 7:05 am
அனைத்தும் உண்மையான வரிகள் மிகவும் ரசித்தேன் உணர்ந்தேன் சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Sep-2015 11:59 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jun-2015 10:57 am

உன் வயிற்றில் எட்டி உதைத்த
உதைகள் அதிகம்-அந்த வலியும்
சுகமென்று என்னை தாங்கினாயம்மா

பத்து திங்களிலே அல்லும் பகலும்
உடல் வருத்தி என் குழந்தையே!
என்று பாசத்தோடு என்னை காத்தாய்யம்மா.

பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை
வாசலடிக்குச் சென்று மறுஜென்மம்
பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!!!!

உன் உடலும் உள்ளமும் என்னால்
பட்ட வேதனை மறந்து ஈன்றெடுத்த
மறுநொடியில் உன் மார்பிலணைத்து
நோவினை மறந்து பாசத்தோடு முத்தமிட்டாய்.

உனக்கு செய்த கொடுமைகள்
போதாது என்று உன்
உடலில் இறுதியாயிருந்த
அந்த ஒரு துளி உதிரத்தை
பாலாக குடித்தனம்மா.

ஓடம்,சோலை,வானமென கற்பனையால்
கதைகூறி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Oct-2016 5:09 pm
உணர்வு கவிச் சிறப்பு :) 23-Oct-2016 12:22 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Dec-2015 6:29 am
தாயிக்கு தாலாட்டு ............................ 10-Dec-2015 6:20 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 10:08 am

தூண்களின்றி கட்டப்பட்ட வான்வெளியில்
அணிநடை வகுக்கும் சிட்டுக்களே..............!!!
உங்கள் கூட்டத்தில் பறந்த பெயர் தெரியா
பட்சியொன்றின் இறக்கை மண்ணை நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கிறது வீழ்வதற்காய்.

தென்றலும் அழகு கொடுத்த பறவையின்
நிலைமை கண்டு இறகை மண்ணில் விழாமல்
தூக்கி பறந்தது சோகத்தோடு.......,
தடையில்லா பாதையில் பயணிக்க எண்ணி
கடல்வழியாய் யாத்திரை தொடங்கியது.

திரைகள் தேடும் கரையில்
மண்ணை காணவில்லை
களவாடிச் செல்கிறான் ஒருவன்.
மீன்கள் கொப்பளிக்கும் நீரலைகள்
குப்பையால் மூடப்பட்டிருந்தது.
மனிதனால் போடப்பட்ட கழிவுகளே!!
இப்படி நாற்றமடிக்கிறது என்றால்
எறிந்த உள்ளம் எப்படி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2015 11:38 pm
சிந்தனைச் சிறப்பு நட்பே... உண்மைகளை கண் முன் படமோட்டும் படைப்பு... 20-Sep-2015 11:32 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jul-2015 10:36 pm
தாக்கம் எனக்குள் ஏக்கம் அருமை.... arumai... 12-Jul-2015 2:16 pm

தொண்டை வற்றும் கோடைக்-
கால தாகம்
தீர்க்கும் நீரும் இல்லை
தேடல் காய்ந்து தேங்-
கும் சொட்டல்
மழையில் நனையும்
மெய்நீர் இல்லை

முள்ளில் நிற்கும் பனித்-
துளிகள் ஒழுகிக் கொண்டு
போகும் முன்னே
வீசும் காற்றில் சிதறிப்
பறந்து புல்லை
வருடி மண்ணைச் சேரும்

மூச்சு வரை இந்த
உயிர்
அதன் பின்பு உதிர்ந்த
மயிர்
வாழும் முன்னே பயனாய்
இருந்து
போன பின்னும் போற்றும்
பண்பு
பொய்யாய் ஒட்டி வாழும்
காலம்
நீ உதவாக்கரை என
பேர் சூட்டும்

அடையும் பயணம்
மாறிப் போகும்
இலக்கு கூட
தூர நீங்கும்
சுத்தல் வரை
போன பின்னும்
திரும்பி வந்து சேர்த்துச்
செல்லும்
வாழ்க்கை கதையில

மேலும்

ஏதோ ஒரு தேடலில் வாழ்கையும் ஏதோ ஒரு வாழ்கையில் தேடலும் பயணமித்துக் கொண்டுதான் இருக்கிறது... மிக அருமையான கவிதை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 6:22 pm
நிறைய எழுத வாழ்த்துக்கள் 31-May-2015 2:17 pm
உங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழரே.... மகிழ்ச்சி 31-May-2015 1:56 pm
அழகான வரிகளில் ஆழமான வருடல்கள் ஒரு வாழ்க்கை பாடத்தையே கற்று தந்து விட்டது உங்கள் கவிதை நண்பரே!! மனம் தொட்ட வரிகள் அனைத்தும் 31-May-2015 1:43 pm
குறிஞ்சிவேலன் தமிழகரன் - றிகாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 12:02 am

படித்ததில் பிடித்தது...
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக் (...)

மேலும்

ரொம்ப யோசித்து, ஒற்றைக் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டேன்.ஐயகோ! வண்டி வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் வண்டி வராது என்று னியாநித்த பாதைக்கித் தடம் மாறிட, பத்தோடு பதினொன்றாய் அத்தனை குழந்தைகளும் இறந்தன.. யார் தவறு..? நான் மட்டும் யோசிப்பவன் என்று நினைத்துச் செயல்பட்ட நானா? அல்லது நல்லதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துச் செயல்பட்ட குழந்தைகளா? மற்றவர்களுக்கும் யோசிக்க வரும் மொத்தத்தில் எது எல்லோருக்கும் நல்லது என்று யோசித்துச் செயல்படுவதே சிறப்பன்றோ? 25-May-2015 8:47 am
குறிஞ்சிவேலன் தமிழகரன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2015 10:11 pm

இதயத்துக்குள் உதயமான அன்பே
வான் சிவந்த உன் நேசத்தினால்
இடமாறித்துடிப்பது நான் மட்டுமல்ல
என் ஈழத்தாயின் தமிழ் சுமக்கும்
இணையத்தின் எழுத்து தளமும் தானே

மங்கை இவள் மண் தொட்ட பாதம்
கண்பட்டதெல்லாம் மின்னுதடி மின்மினியாய்
மண்ணுலகில் பெண்ணிலவு நீயென்று
பெரும் மழையையும் பெருமை சேர்க்குது -உன்
மைத்துளியில் பா இசைத்து

சாலையோரம் வீசும் தென்றல் -உன்
கண் கூசும் சல்லடை நடைகண்டு
மினி சூறாவளியை தோற்றுவிக்க
அந்தியில் வெண் தாமைரையும் -தன்
அழகைக் கூட்ட உன்னழகை கடன் கேட்கிறதே

பாரினிலே மங்கை இவள் உள்ளம்
தன்னகத்தில் கொண்ட நேயத்தினை
தாரளமாகத்தரும் தங்கத் தடாகமாய்

மேலும்

மிகவும் அருமை...... 26-Dec-2015 11:59 pm
அழகுத் தமிழில் அருமையான வாழ்த்துப்பா கீர்த்தனா . வாழ்த்துக்கள் 25-May-2015 6:32 am
அழகான வாழ்த்துப் பா வாழ்த்துக்கள் 25-May-2015 6:20 am
ஈழத்தாயின் தமிழ் சுமக்கும் இணையத்தின் எழுத்துத் தளமும் நீதானே அருமை மண் வாசனை வீசுகிறது கவிதையில் வாழ்த்துக்கள் கீர்த்தனா 24-May-2015 10:44 pm

'புயலின் மறுபக்கம்'தலைப்பே விசித்திரமானது.ஒரு கதையை வாசகன் படிப்பதற்கு தூண்டுகோளாய் அமைவது வரிகளின் வடிவமல்ல அதன் தலைப்பே என்று அழகுற படம்பிடித்துக் காட்டுகிறது இச்சிறுகதை.ஆரம்ப வரிகளின் ஓட்டம் கதையை தொடர்ந்து படிக்கச்செய்யும் நாட்டம்.
கலவரம் நேர்ந்த நிகழ்வின் கோரத்தை 'மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.
மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., 'இதை விட வேறு வரிகளால் சொல்ல இயலாது என்று தான் நினைக்கிற

மேலும்

திறனாய்க்கட்டுரை மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். அயல் நாட்டில் இருந்தாலும் தமிழ் இலக்கிய ஆர்வம் உங்கள் அனைவரது படைப்புகளைப் படிக்கத் தூண்டுகிறதே ! நன்றி 20-Mar-2016 4:57 am
வாழ்த்துக்கள் நண்பரே 24-May-2015 10:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (85)

சுஜய் ரகு

சுஜய் ரகு

திருப்பூர்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (85)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (84)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே