பெண்ணினம் காப்போம் - கற்குவேல் பா

அடுப்பங்கரை துறந்தே-நல்
அலுவலகம் நுழைந்தாள் ;
ஆங்கும், வன்புத்தி கொள்,
ஆணிருக்க, ஐயோ என்றாள் !

இச்சைதரு விசமிகள் கண்டே,
இவ்வுலகு நொந்தாள் ;
ஈயார் வாயில் பணியமர்ந்தே,
ஈர நாவில் அரிசியானாள் !

உறவுகள் யாவும்-முகமுடி
உதிர்க்க, உறைந்தாள் ;
ஊரார்வாய் விழுந்துவிழுந்து,
ஊனம் தரித்தாள் !

எச்சைசொல் வந்துவந்து விழ, .
எகிறிஎகிறி அழுதாள் ;
ஏற்றமிகு வாழ்க்கை-காணா
ஏங்கி ஓய்ந்து போனாள் !

ஐந்திணை எங்கிலும்-ஒருபிடி
ஐயமே கொண்டாள் !

ஒன்றுவழி பிறந்திடுமென-உயிர்
ஒட்டிக் கிடந்தாள் ;
ஓரெழுத்து, பிழை நீயென-அசரீரி
ஓசைஎழ, உடைந்தாள் !

ஔவியம்சூழ் உலகென்றே-நல்
ஔடதம் தேடி விரைந்தாள் !

#அன்னையர்_தினம்

#பெண்கள்_நிலை

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-May-16, 9:40 pm)
பார்வை : 117

மேலே