உன்னைச் சேரும்

உன்னைச் சேரும்
கனவுகளோடு
கடவுளுக்கு
தினமும்
பூச்சரம் தொடுத்தேன்.....

கண்கெட்ட
கடவுள்
என்றுதான்
திட்டினாலும்....இந்தக்
காதலால்
உன்னை முழுவதுமாக
வெறுத்து விட்டுப்
போக முடியவில்லை.....

தீராத
காதலால்
நீராகாரமும்
இல்லாமல்..... என்
விரதங்கள்
இரவுபகல்
தொடர்கிறதே......

தூக்கம்
தொலைந்து போகிற
ஒவ்வொரு
இரவும்....எனக்குள்
ஏக்கம்
விதைத்துப்
போகிறது......

கண்ணை விட்டு
நீ..... போனநாள்
முதலாய்
விண்ணை முட்டும்
வேதனைகள்
சிலபல
நாளாய்.....

பூப்போல என்நெஞ்சு
மறந்து
நீ..... முட்களை
மட்டும் வீசுகிறாய்.....
பூக்களை
காலில் போட்டுவிட்டு.....

கண்ணாடி
நெஞ்சு.....உடைஞ்சு
நாளாச்சு....ஆனாலும்
கல் எறிகிறாய்
மறந்தே போனாயா
நான் மரணித்தே
விட்டேன் என்பதை......

நீங்காத
நினைவுகள் தான்
நீ தந்து
போனது....நீரில்
மூழ்காது
காற்றுள்ள பந்து....
என்பது போல..... என்
நெஞ்சில்
காதலுள்ளவரை
என்னோடு
என்னுயிரும் வாழும்.....!!

எழுதியவர் : thampu (8-May-16, 11:33 pm)
Tanglish : unnaich serum
பார்வை : 223

மேலே