கொக்கரக்கோ
நெடுநாள் கனவொன்று
நிறைவேறும் வழி வேண்ட,
“பெரியபாளையத்தம்மனுக்கு
கோழி சுற்றி விடு”
பரிகாரம் சொன்னார்
ஜோசியர் மாமா!
சுற்றிவிடப்படும் கோழிகள்
மறுசுழற்சிக்கானவை என்பது
ஊரறிந்த ரகசியமெனினும்
பொருட்படுத்துவதில்லை
பவானி அம்மா!
பாரிய நேர்த்திக்கடன்களோடு
பங்களாவைச் சுமத்தியதன்
கழுத்தொடிப்பது பாவமென
பஞ்சாரத்தில் பதுக்கியதென்
பிரியாணிக் கனவு!