முல்லைச் சிரிப்புந்தன் மெல்லிதழில் விரிய
மல்லிகை மொட்டுக்கள் மெல்ல விரிந்திட
சில்லென்ற தென்றலோர் தண்முத்தம் தந்துசெல்ல
நில்தென்றல் என்னை மறந்ததேன் என்றாய்நீ
முல்லைச் சிரிப்புந்தன் மெல்லித ழில்விரிய
சொல்முத்தம் சிந்தும் கவிதைகளைத் தந்திடவோ
நில்சற்று நீஎன்றேன் நான்
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
----அடி எதுகை ---மல் சில் நில் முல் சொல் நில்
---1 3 ஆம் சீர் மோனை --ம மெ, சி த , நி ம , மு மெ , சொ க , நி நா