ஹைக்கூ

கொடையாளி
நான் கை ஏந்தவில்லை என்றால் அவன் கை சிவக்காது

நிழல்
நானின்றி அவனில்லை

வாழ்க்கை
படுத்தா உறக்கம், எழுந்தா சொர்க்கம் ,நடந்தால் நடுக்கம்

ஆருடம்
தன் நிலை மறந்து அடுத்தவனுக்கு உபதேசம்

இல்லை தொல்லை
கண்டதும் ………..அது வரவில்லை
காணாது போனது தெரியவில்லை !

மறதி
என்னை நானே நொந்து கொண்டேன்
என் விலாசத்தை தொலைத்துவிட்டு

எழுதியவர் : மு.தருமராஜு (29-Jan-25, 11:41 am)
Tanglish : haikkoo
பார்வை : 16

மேலே