தெருவெல்லாம் தீபம் திருக்கார்த்திகை நாள்
கருங்கூந்தல் தன்னில் கவின்மலர்கள் சூடி
அருங்காஞ்சிப் பட்டுடுத்தி அந்திநிலாப் போல
மருவிலாமங் கையர் மணிதீபம் ஏற்ற
தெருவெல்லாம் தீபம் திருக்கார்த்தி கைநாள்
வருகைதந்தாய் வான்நிலா வண்ணதீபம் காண
அருணா சலம்பார் அழகு

