இரவில் உலவும் எழில்நிலவில் உந்தன் வரவினை எண்ணி

இரவில் உலவும் எழில்நிலவில் உந்தன்
வரவினை எண்ணி வழிபார்த் திருப்பேன்
பிறைநில வாய்குறைந்து போகுதுபார் மேலும்
குறையுமுன் வந்துநீ செல்

---இரு விகற்ப இன்னிசை வெண்பா

இரவில் உலவும் எழில்நிலவில் உந்தன்
வரவினை எண்ணி யிருப்பேன் -- வரிபோல்
பிறைநில வாய்குறைந்து போகுதுபார் மேலும்
குறையுமுன் வந்துநீ செல்

--- இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-24, 11:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே