பணம்

பணம்...
18 / 12 / 2024

பணம்...
உறவை முறித்துவிடும்.
நட்பை பகையாக்கிவிடும்.
பண்பை பாழாக்கிவிடும்.
பாசத்தை மோசமாகிவிடும்.
நேசத்தை விஷமாக்கிவிடும்.
கண்களை குருடாக்கிவிடும்.
செவிகளை செவிடாக்கிவிடும்
கால்களை தடம் மாற்றிவிடும்.
கைகளை தடுமாற வைத்திடும்.
இந்த பணம்.
ஒன்று மட்டும்
நிச்சயம் - இந்தப்
பணம் இல்லையெனில்
பிணம்தான்..

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (18-Dec-24, 10:07 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : panam
பார்வை : 5

மேலே