மலரின் காதல்

வண்ண மலரின் அழகில் மயங்கி, தழுவியது காற்று காதலுடன் நெருங்கி..
காற்றின் காதலுக்கு மலரும் இணங்கி,
தந்தது தன் மணத்தை பரிசாய் விரும்பி!

நழுவியது காற்று வேறு மலர் தேடி..
வாடியது மலரும் காற்றின் வரவை நாடி..
காற்றே! காற்றே! தென்றல் காற்றே..
வருவாய் மீண்டும் மலரின் காதலை ஏற்றே..

வழி தவறி சென்ற காற்று வருவதற்குள்..
வாடி விழுந்தன மலரின் இதழ்கள் பூமிக்குள்!
ஒரு நொடி காதலே காற்றுக்கு மலரிடம்..
முகவரியற்ற காற்றின் காதல் வாழுமே அவ்விடம்!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (14-Dec-25, 11:05 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : malarin kaadhal
பார்வை : 16

மேலே