பறந்தே போனது
பறந்தே போனது...
18 /.12 / 2024
உயிர் குருவி ஒன்று
உடற் கூட்டில் இன்று
வாடகைக்கு வந்தது.
வந்தபின் கூட்டையும்
விரிந்து பரந்த
இவ்வுலகின்
படைப்பத்தனையும்
இருக்கும்வரை
கிடைத்ததையும் - தானே
கண்டுப்பிடத்ததையும்
ஆண்டு அனுபவித்திருந்தது.
கஷ்டமோ நஷ்டமோ
வெற்றியோ தோல்வியோ
இன்பமோ துன்பமோ
இங்கிருந்ததை பங்கிட்டு
பசித்திருந்தது..புசித்திருந்தது.
காலம் வந்தவுடன்
கைகழுவி யாவற்றையும்
இங்கேயே விட்டுவிட்டு
பறந்தே போனது.