எழுத்துநடை புரிந்துகொண்டால் எழுத்தாளன் - தரவு கொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
எழுத்துநடை புரிந்துகொண்டால்
..எழுத்தாளன் ஆகிடலாம்;
ஒழுங்கமைவாய் அதுவமைந்தால்
..உணர்ந்ததனை எழுதிடலாம்!
பழுதுமின்றி எழுதிடலாம்
..பரவசமாய் எழுதிடலாம்;
மழைப்பொழிவாய் எழுதிடவே
..மனிதநேயம் வேண்டுமன்றோ!
- வ.க.கன்னியப்பன்

