ரசிக்கலானேன்

ரசிக்கலானேன்.
18 / 12 / 2024

மோகத்தினால் எழும்
தாகத்தினால் வரும்
போகத்தை நானும்
கொண்டாடினேன்
தேகத்தினில் ஊறும்
இச்சையினால் படும்
அவஸ்த்தையினால் நாளும்
பாடுபட்டேன்.
காலத்தினால் கொண்ட
கோலத்தினால் கொட்டும்
மேளத்தினால் இளமை
ராகத்தைப் பாடினேன்.
காதலினால் ஏற்பட்ட
மோதலினால் உண்டான
சோகத்தினால் உள்ளம்
நோகக்கண்டேன்
வாழ்வினில் வந்துவிட்ட
தாழ்வினில் வெடித்துவிட்ட
விரிசலிலும் உன்னை
நான் ரசிக்கலானேன்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (18-Dec-24, 10:58 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே