கூடல் இழந்தேன் கொடியன்னாய் – முத்தொள்ளாயிரம் 33
நேரிசை வெண்பா
ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉங்
கூடல் இழந்தேன் கொடியன்னாய் – நீடெங்கின்
பாளையிற் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று! -33
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
புனல்நாட்டுக் காளையைக் கண்ணுறங்கும் கனவில் கண்டேன். ஒரு சமயம் பிணக்குப் போட்டு ஊடிக்கொண்டிருந்தேன். மற்றொரு சமயம் அவனோடு கூடியிருப்பேனா என்று விளையாட்டில் கூடல் இழைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கொடி போன்றவளே! தோழியே! என்ன செய்வேன்? தென்னம்பாளையில் தேன் கூடு கட்டும் புனல்நீர் வளம் மிக்க நாடன் அவன்.