அறனட்டா னன்னெறிக்கண் நிற்க வடங்காப் புறனட்டான் - சிறுபஞ்ச மூலம் 27
நேரிசை வெண்பா
அறனட்டா னன்னெறிக்கண் நிற்க வடங்காப்
புறனட்டான் புன்னெறிப்போ காது - புறனட்டான்
கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினாற்
பண்டெடுத்துக் காட்டும் பயின்று 27
சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
அறத்தை விரும்பியவன் நல்லவழியில் நிற்பதற்கு நீதிக்கு அடங்காத அறத்துக்குப் புறமாகிய காரியத்தை விரும்பியவனுக்குரிய புன்மையான வழிகளில் செல்லமாட்டான், அறத்துக்குப் புறமாகிய காரியத்தை விரும்பியவன் கள்ளுண்டலையும், களவு செய்தலையும், சூதாடலையும் தன் உள்ளத்தினாலே பார்த்து நல்லனவென்று எடுத்துக்கொண்டு அவற்றிற் பழகி அவற்றால் நேர்ந்த பழைய தன்மைகளை விலக்கிக் காட்டுவான்.
கருத்துரை:
அறவழி நடப்பவன் தீவழி புகான், தீவழி செல்லோன் தீத்தொழிற் பழகி அதனாலாகும் பலன்களையெல்லாம் உலக்குக்குக் காட்டுவோன் ஆவான்!