காதல் ஏன் அவ்வளவு நல்லதில்லை
காதல் ஏன் அவ்வளவு நல்லதில்லை
என்பதற்கு
காரணங்கள் மூன்று!
முதலாவது:
உருப்படுவோமா என்பதை விடுத்து
அவள் பார்வையில் புலப்படுவோமா
என்பதையே வேட்கையாக்குகிறது.
இரண்டாவது:
லட்சணங்களால் கவரப்படுவதையும் - பின்
லட்சங்களால் களையப்படுவதையுமே
லட்சணமாகக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது:
காலாவதியாகி கால் நூற்றாண்டானாலும்
கசிந்துருகும் கவிஞர்களை
கண்டமேனிக்கு களமிறக்கிவிடுகிறது.