அன்பை செதுக்கிய சிற்பி அம்மா முஹம்மத் ஸர்பான்
உன் வயிற்றில் எட்டி உதைத்த
உதைகள் அதிகம்-அந்த வலியும்
சுகமென்று என்னை தாங்கினாயம்மா
பத்து திங்களிலே அல்லும் பகலும்
உடல் வருத்தி என் குழந்தையே!
என்று பாசத்தோடு என்னை காத்தாய்யம்மா.
பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை
வாசலடிக்குச் சென்று மறுஜென்மம்
பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!!!!
உன் உடலும் உள்ளமும் என்னால்
பட்ட வேதனை மறந்து ஈன்றெடுத்த
மறுநொடியில் உன் மார்பிலணைத்து
நோவினை மறந்து பாசத்தோடு முத்தமிட்டாய்.
உனக்கு செய்த கொடுமைகள்
போதாது என்று உன்
உடலில் இறுதியாயிருந்த
அந்த ஒரு துளி உதிரத்தை
பாலாக குடித்தனம்மா.
ஓடம்,சோலை,வானமென கற்பனையால்
கதைகூறி மடியில் துயிலவைத்து சிரிக்கச்
செய்தாய்யம்மா.-நன்றி மறந்து உனக்கு
வார்த்தையாலும்,உள்ளத்திலும் நோவினை
செய்தனம்மா.
நீ அணியும் செருப்பும் உனக்கு
நன்றிக்குரியது உன் எடையோடு சுமந்த
நான்தான் நன்றி மறந்தவனம்மா!
நீ பட்ட வேதனையறிய மறுஜென்மத்தில்
நான் உன் தாயாக
உனைச் சுமக்கனுமம்மா.