அந்தியின் மஞ்சள் அழகினில் வந்தவளோ
![](https://eluthu.com/images/loading.gif)
அந்தியின் மஞ்சள் அழகினில் வந்தவளோ
சிந்திடும் தேனை இதழிலேந்தி வந்தவளோ
அந்திவரும் சந்திரனை வென்றிட வந்தவளோ
எந்தன்வன் தோளினில் சாய்ந்திட வந்தாளோ
அந்திநில வேகேட்டுச் சொல்
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
அந்தியின் மஞ்சள் அழகினில் வந்தவளோ
சிந்திடும் தேனினை செவ்விதழில் கொண்டாளோ
சந்திரனை யும்வெல்ல பேரழகில் வந்தவளோ
எந்தன்வன் தோளில் இவள்சாய வந்தாளோ
சந்திரனே நீகேட்டுச் சொல்
---மூன்றாம் சீரில் மோனை அமைந்த வடிவம்