றிகாஸ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  றிகாஸ்
இடம்:  srilanka
பிறந்த தேதி :  05-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2014
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  18

என் படைப்புகள்
றிகாஸ் செய்திகள்
றிகாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2022 9:04 am

பெண்ணியம் நோக்கி பெண்கள் புனிதயாத்திரை சென்றார்கள்..
வழியில் ஒரு ஆசாமி.. கண்கள் பிதுக்கி.. தலை மயிர் சுருட்டி.. தொப்பை குவித்து.. கறுத்த உதடுகளில் சுருட்டுப் புகைத்து..

ஒருவள் சொன்னாள்.. 'இவனிடம் வழி கேட்போமா?'..
'முழியே சரியில்லை' என்றாள் கோமதி..
'நமக்கு தைரியம் வேண்டும்' என்றாள் சுவாதி..
ஒருவாறாக அவர்கள் அவனை நெருங்கினார்கள்..
சுருட்டு வாசம் மூக்கை குடைந்தது..
அறியாமல் தும்மிவிட்டால் பரீதா..
பதிலுக்கு அவனும் முறைத்துக்கொண்டான்..

'நாங்கள் பெண்ணியம் செல்கிறோம், எங்களுக்கு வழி தெரியவேண்டும்' என்கிறாள் ஜெஸ்ஸி..
'பெண்ணியமா? அப்படியென்றால்?' என்கிறான் கரகரத்த குரலில்..

'அது ஒரு முடிவில்லாப்

மேலும்

றிகாஸ் - எண்ணம் (public)
02-Jan-2022 9:00 am

பெண்ணியம் நோக்கி பெண்கள் புனிதயாத்திரை சென்றார்கள்..
வழியில் ஒரு ஆசாமி.. கண்கள் பிதுக்கி.. தலை மயிர் சுருட்டி.. தொப்பை குவித்து.. கறுத்த உதடுகளில் சுருட்டுப் புகைத்து.. 

ஒருவள் சொன்னாள்.. 'இவனிடம் வழி கேட்போமா?'.. 
'முழியே சரியில்லை' என்றாள் கோமதி.. 
'நமக்கு தைரியம் வேண்டும்' என்றாள் சுவாதி..
ஒருவாறாக அவர்கள் அவனை நெருங்கினார்கள்..
சுருட்டு வாசம் மூக்கை குடைந்தது.. 
அறியாமல் தும்மிவிட்டால் பரீதா..
பதிலுக்கு அவனும் முறைத்துக்கொண்டான்..

'நாங்கள் பெண்ணியம் செல்கிறோம், எங்களுக்கு வழி தெரியவேண்டும்' என்கிறாள் ஜெஸ்ஸி..
'பெண்ணியமா? அப்படியென்றால்?' என்கிறான் கரகரத்த குரலில்..

'அது ஒரு முடிவில்லாப் புனித பிரபஞ்சம்.. அதன் வெளிகள் மிகவும் மென்மையானது.. அதில் நாங்கள் பூக்களின் மகரந்தங்களாய் உறங்க முடியும்.. அதன் காற்று எங்கள் சுவாசத்தில் இனிக்கும்.. அதன் அமைதி எங்களை ஆராதித்துக்கொண்டிருக்கிறது..' கோரஸாக பாடினார்கள்..

'ஓ.. அப்படியா??' வயிறு குழுங்க சிரித்தான்..
'அப்படியென்றால் அதற்கு இப்படித்தான் செல்ல வேண்டும்'..

அவன் காட்டிய வழியில் தொடர்ந்தது யாத்திரை..

வழியில் கடவுளைக் கண்டார்கள்.. கடவுள்... அவர் கடவுள்தான்...
'பெண்களே.. கூட்டமாக எங்கே செல்கிறீர்கள்'..
'கடவுளே நாங்கள் உனது படைப்புதானா?'..
'அதில் என்ன சந்தேகம்?' கடவுள் புன்முறுவினார்..
'எங்களை இந்த உலகம் கொடுமைப்படுத்துகிறது.. அடிமையாய் பார்க்கிறது.. 
எங்களுக்கு அங்கு வாழப்பிடிப்பில்லை.. 
சில நேரம் உன்மீதும் எங்களுக்கு கடுங்கோபம் வருகிறது.. 
அதனால் நாங்கள் பெண்ணியத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம்'..

'அப்படியா? ஆதற்கு ஏன் இந்த வழியால் செல்கிறீர்கள்?..'
'வரும் வழியில் ஒரு ஆசாமிதான் எங்களுக்கு வழிகாட்டினான்'..
கடவுள் சிரித்தார்.. வயிறு குழுங்க சிரித்தார்..
'அப்படியென்றால் உலகம் உங்களைக் கொடுமைப்படுத்துவது நியாயமே.. பெண்ணியத்துக்கான வழி இதுவல்ல.. நீங்கள் வந்த அதே பாதையால் இன்னும் பலஆயிரம் மைல்கள் சென்றிருக்கவேண்டும்'..

கோமதிக்கு தலையில் அரித்தது..
'என்னை என் வீட்டார் சமயலறையின் இடுக்குகளில் தேடிக்கொண்டிருப்பார்கள் நான் வீடு செல்கிறேன்' என்றாள்..
'சரி வாங்கடி.. எல்லோரும் திரும்பி உலகத்திற்கே போவோம், அங்கு பாரதி நமது விடுதலைக்காக பாடுவான், நாம் குனிந்து கும்மியடிப்போம்'..

அவர்கள் திரும்பினார்கள்.. கடவுள் சிரித்துக்கொண்டே இருந்தார்..

மேலும்

றிகாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 1:04 am

#கடவுள்?
ஒரு ராட்சஷ ஆமைதான் இந்த தட்டையான வட்டவடிவ உலகை தாங்குகிறது.. அப்படியாயின் இந்த ஆமையைத் தாங்குவது?.. அதைவிடப்பெரிய இன்னுமொரு ராட்சஷ ஆமை.. அதனை? இன்னொனுமொரு ஆமை.. என்று  ஆமைக்கோபுர எண்ணக்கருவில் இருந்து "Turtles All the Way Down"  என்று வளர்ந்தது இந்த விஞ்ஞானம்..

நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஏதிஸ்ட். உங்கள் குழந்தைகளுக்கு விஞ்ஞான உண்மைகளை தெளிவுபடுத்தி வளர்க்கிறீர்கள். அவர்கள் உங்களைப்பார்த்து
நாம் எப்படி பிறந்தோம்? உயிரினம் எப்படி தோன்றியது? பூமி எப்படி தோன்றியது? பிரபஞ்சம் எப்படி? பெருவெடிப்பு எப்படி? என்றெல்லாம் தொடர்ந்து கேள்வி கேட்பார்கள் என்று நினைக்க வேண்டாம். They

மேலும்

றிகாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2018 3:12 am

கொடிய கவிதைகள் வாழும் அடர்ந்த காட்டினிலே..
தன்னந்தனியே நான்.. என்னுடன் ஒரு அமாவாசை..
கவிதைகள் பொல்லாதவை, பசியெடுத்தால் மாமிசம் உண்டு இரத்தம் குடிப்பவை..

ஓ.. சொல்ல மறந்தேன்.. நான் ஒரு கவிதை வேட்டையன்..
உயிருடன் கவிதைகளை பிடிப்பதில் தேர்ந்தவன்.. வீராதி வீரன்..

ஆ.. நான் இன்னும் வித்தைக்காரன், அல்லது கூத்தாடி..
நான் பிடிக்கும் கவிதைகளை கூண்டில் அடைப்பேன்..
விகாரமான கண்களைப் பிரட்டி அகோரமாய் சிரிக்கும் கவிதைகளைக் காட்டி பிழைக்கிறேன்..
ரசிப்பார்கள்.. ஆபத்து என்று தெரிந்தும் கவிதைகளுடன் விளையாடத் துடிப்பார்கள்..

ஆனால் கவிதைகளை எனக்கு பிடிக்காது.. அவை எப்போதும் பப்பரப்பே என்று மு

மேலும்

றிகாஸ் - றிகாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 12:13 am

ஓரு நாள் ராத்திரி நல்ல நிலா. அவள் மூங்கில் போட்டு கட்டிய பழைய பக்கட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது மூங்கில் உடைந்து பக்கட்டின் அடிப்பாகம் சட்டென்று விழுந்துவிட்டது. இதை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறாள்...
"இப்படியும் அப்படியும் நான் பழைய பாத்திரதைக் காப்பாற்ற முயற்சித்தேன் திடீரென்று அடிப்பாகம் விழுந்தது.
இனி...
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை தண்ணீரில் இனி நிலவும் இல்லை"
உ.து: சுஜாதாவின் "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து"

மேலும்

தாயின் புலம்பல் இது....? முத்தம் தந்த பிறை முந்தாணி விழுந்தபிறை பொத்தி வளர்த்தபிறை பொல்லாப்பை எதிர்த்தபிறை எத்திப் புரண்டபிறை என்னிடுப்பில் இருந்தபிறை இத்து விழுந்ததும்,ஏன்? என்,குடமும் உடைந்ததும்,ஏன்? 25-May-2015 6:43 am
றிகாஸ் - றிகாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 12:02 am

படித்ததில் பிடித்தது...
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக் (...)

மேலும்

ரொம்ப யோசித்து, ஒற்றைக் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டேன்.ஐயகோ! வண்டி வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் வண்டி வராது என்று னியாநித்த பாதைக்கித் தடம் மாறிட, பத்தோடு பதினொன்றாய் அத்தனை குழந்தைகளும் இறந்தன.. யார் தவறு..? நான் மட்டும் யோசிப்பவன் என்று நினைத்துச் செயல்பட்ட நானா? அல்லது நல்லதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துச் செயல்பட்ட குழந்தைகளா? மற்றவர்களுக்கும் யோசிக்க வரும் மொத்தத்தில் எது எல்லோருக்கும் நல்லது என்று யோசித்துச் செயல்படுவதே சிறப்பன்றோ? 25-May-2015 8:47 am
றிகாஸ் - றிகாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 1:09 pm

-எம்.எப்.எம்.றிகாஸ்

சரித்திரக்காலம் தொட்டு நாகரீகங்கள் பல தாண்டியும் மனிதனின் கோபமும் வக்கிரமும் இந்த பூமியை போர் என்ற போர்வையில் மனித இரத்த ஆறுகளால் நனைக்கத் தவறவில்லை. அத்தனை சாம்ராஜ்யங்களும் நாகரீகங்களும் இந்த பூமியில் மனித எலும்புகளில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பது காலச்சான்று. வெறிகொண்ட ஓநாய்களுக்கும் கீச்சிடும் கழுகுகளுக்கும் மனித மாமிசம் மனித இனத்தாலேயே வெட்டி வீசப்படுகிறது.

இன்று இதன்பின்ணியில் ஒரு நவீனபோர்க்களம். புழுதியும் புகையும் அடர்ந்த முட்புதர்க்காட்டின் மேற்பரப்பை மூடிக்கொண்டிருந்தது. முறிந்துபோய் காய்ந்து பூக்கமறுக்கும் எருக்கிலைச்செடிகளும் ஏவுகணைகளின் தாக்குதலில

மேலும்

யதார்த்தத்தில் துன்பங்களே தொடரும் சில வாழ்க்கைகளின் பிரதிபலிப்பாக ஒவ்வொரு வரியும் ஏற்படுத்தி செல்லும் வலிகள்..இலங்கைத் தமிழில் மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது..சிறப்பு 08-Feb-2015 3:11 pm
றிகாஸ் - றிகாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2014 9:06 pm

எம்.எப்.எம். றிகாஸ்

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பளிங்குக்குளியலறையில் நீர்க்குழாயில் இருந்து நீர்
சொட்டிக்கொண் டிருந்தது. அந்த குளிர்ந்த நீரில் டேவிட் தனது முகத்தைக்
கழுவிக்கொண்டிருந்தான். அவனுக்குள் இருந்த சோம் பேறித்தன்மையும் நித்திரை மயக்கமும்
எங்கோ ஓடி மறைந்து விட்டன. ஆனாலும் அவனுடய உடல் ஒருவித சோர்வை உணர்ந் து
கொண்டிருந்தது. பளிங்குபோல் தெளிவாய் இருந் த கண்ணாடியில் முகத் தை நிமிர்ந்து பார்த்தான்.
அவனுடைய கண்கள் நன்றாவே சிவந்து இருந்தது.
“சே... நைட் அடிச் ச சரக் கு போத இன்னும் கண்ணுல தெரியுது...”
இப்போது அவனுடய நினைவுகள் இரவு அவன் சென்றிருந

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (26)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே