காளியப்பன் எசேக்கியல் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  காளியப்பன் எசேக்கியல்
இடம்:  மாடம்பாக்கம்,சென்னை
பிறந்த தேதி :  05-Apr-1943
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2012
பார்த்தவர்கள்:  5620
புள்ளி:  3638

என்னைப் பற்றி...

பிறந்தது தூத்துக்குடியாம் திருமந்திர நகரில்-பள்ளிக் கல்வி :S .A .V உயர் நிலைப்ப்பள்ளி யில் - வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் கணித இளங்கலைப் பட்டப்படிப்பு-முற்றுப்பெறாத கணித முதுகலைப் படிப்பு மதுரைக் கல்லூரி ,மதுரையில்-மும்பையில் கணக்கராக இந்தியன் வங்கியில் சேர்ந்து, படிப்படியாக ,இராயப்பேட்டை, புதுதில்லி, South Extension நியூ டெல்லி ,லூதியானா, ப்க்வாடா, பஞ்சாப், பிலாய் (M.P) முதலிய பல இடங்களில் பல நிலைகளில் பணி செய்து,வங்கி ஆய்வாளராகவும் இருந்து கடைசியாக தலைமைச் செயலகத்தில் முதன்மை மேலாளராக (Chief Manager) விருப்ப ஓய்வில் 2001 பணி நிறைவு செய்துகொண்டு வெளிவந்தேன் -அது முதல் கிழக்குத் தாம்பரம் மாடம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற வங்கிப் பணியாளனாக இருந்து வருகிறேன்;
கல்லூரியில் -1962 முதல் தமிழ்ச் செய்யுள்களில் நாட்டம் ஏற்பட்டுக் கவிதை என்னும் பெயரில் எனது எண்ணங்களை எழுதி வைத்துக் ொண்டிருந்தேன்- இப்பொழுது எழுத்தில் பகிர்ந்து வருகிறேன்- எழுத்துத் தளத்தில் வந்த பிறகு அதன் மூலம் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்போல் வேறு எங்கும் கிடைக்க வில்லை-அதற்கு நான் அதிகம் முயற்சிகள் எடுத்துக் கொள்ளமுடியாமல் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.-writes poetry in Tamil Blog address http://eezekkial@gmail.com.occasionally !!!.
எழுத்துத் தளத்திற்கு எனது பணிவன்பான வணக்கங்களை என் கைகள் ஓயும்வரை செலுத்தி வருவேன் --

என் படைப்புகள்
காளியப்பன் எசேக்கியல் செய்திகள்
காளியப்பன் எசேக்கியல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2020 8:21 pm

>>பாவலர் குழுமத்தினருக்கு
குறளடி கொண்டு வந்து, சிந்தடி யாய்த்த வழ்ந்து
நெறிமுறை அளந்து கேட்டு நிமிர்ந்தள படியெ டுத்து
மறவனாய் நெடிலக்குள் மயக்கமில் நடைந டந்து
சிறந்தவ ராவர், கூடும் செந்தமிழ்ச் சோலைச் சான்றோர்
++
>>>பாட்டரசர் கி.பாரதிதாசன், பிரன்சு அவர்களுக்கு

தேனூறும் விருத்தங்கள் தெளிவாய்ப் பாடித்
தித்திக்கத் தந்தவரைச் சிவனைப் போற்றி
ஊனூறும் செந்தமிழின் உணர்வைக் கூட்டி
உளமாறப் பாடியஎம் பாட்டின் மன்னர்
வானேறி நிற்கின்ற கவியின் உள்ளம்
வழுத்துகிறேன் போற்றுகிறேன் சிவனைப் பெற்றோர்
மானேறி நிற்கின்ற மகிழ்வைப் பாடி
மனத்தேறி நிற்கின்றீர் வாழ்க! வாழ்க!
++
>>> திருமிகு கோ.

மேலும்

காளியப்பன் எசேக்கியல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2020 8:09 pm

எடுத்த பொருளினை எப்படிச் சொல்லலாம் என்பதனை (17)
கொடுத்த படிக்கது குன்றுதல் இன்றியே கூட்டிடுவாய் (17)
அடுத்துப் படிப்பவர் அங்கது கொண்டுடன் ஆம்பொருளை (17)
உடுக்கை யதுபோல் உதவியாக் கொண்டுயிர் உய்வகவே (17)
++
நெஞ்சில் பகையுடன் நேரில் சிரிக்கும் நிலவெனவே (16)
வஞ்ச மனத்தினர் வந்தார் முகமன் வலிந்துசொலி (16)
அஞ்சல் அறிகில மென்பார் எனவே அவர்மகிழச் (16)
செஞ்சொல் அரற்றினம் செய்தந் திரமது செம்மைதானே! (16)
++
விஞ்சியெந் நாட்டையும் வீழ்த்தியிப் பாரோர் வியப்பரென
துஞ்சுவர் என்றுளம் தூக்கியே தன்னுள் துணிந்தவராய்
மஞ்செது பேசினும் மாற்றதற் கொன்றும் மதித்துரையார்
அஞ்சவே நுண்மி அனுபிப் பலரை அழ

மேலும்

காளியப்பன் எசேக்கியல் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2019 3:16 pm

நேரிசை வெண்பா

உற்ற படைப்பில் உயர்ந்ததுமக் கட்பிறப்பே;
மற்றதனுள் கற்றவரே மாண்புயர்ந்தோர்; - முற்றவே
தேர்ந்தொழுகு சீலர் சிறந்தோர் எவரினும்
ஓர்ந்தடங்கி னார்மேல் உணர். 293

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலக சிருட்டியில் மனிதப் பிறப்பு உயர்ந்தது; அம் மனிதருள் கற்றவர் சிறந்தவர்; அக்கல்விமான்களிலும் சீலமுள்ளவர் மேலானவர்; அவர் எல்லாரினும் மனம் அடங்கிய ஞானிகளே பெரியவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மிக்க பகுத்தறிவு மக்களிடம் அமைந்திருத்தலால் சீவ கோடிகளுள் அவர் சிறந்து நிற்கின்றார். அங்ஙனம் சிறந்த பிறப்பினராய் வந்துள்ள மனிதர் குழுவில் கல்வியறிவ

மேலும்

இக்கட்டுரையை எழுதித் தயாரித்ததும், இத்தளத்தில் சேர்த்ததும் நான் என்பதைக் குறித்திருக்கிறேன். மூலப் பாடலையோ, எடுத்துக் காட்டுப் பாடல்களையோ நான் எழுதியதாகக் குறிப்பிடவில்லை. அவைகள் கவிராஜ பண்டிதர், பிரபுலிங்க லீலை, தணிகைப் புராணம், வில்லி பாரதம், அக்கினி புராணம், வளையாபதி, ஒளவையார் என்று தனித்தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன். 19-Jun-2019 8:34 am
நல்ல பல மூத்தோரின் கருத்துக்களைத் திறம்படத் திரட்டிக் ,கொடுத்துள்ளீர்கள். படிப்பவர்களுக்கு நல்ல சிந்தனைக்கான பயிற்சியினை இது நல்கும். எழுதியர் என்ற இடத்தில் கவிராஜ பண்டிதர் முதலானோர் என்றும் சேர்த்தது என்ற இடத்தில் வ.க. கன்னியப்பன் என்றும் குறிப்பிடுவதே சரியாகும். 18-Jun-2019 6:35 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2019 8:59 pm

சித்திரையே வருக செந்தமிழ்ப் புத்தாண்டே வருக
பத்திரமாய் பங்குனிப் பாவையும் விடை பெற்றாள்
புத்தகமாய் புதுமலராய் விரிந்து நீ வருக
இத்தேர்தலில் என்ன வித்தை காட்டப் போகிறாய் ?

---தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
அன்புடன், கவின் சாரலன்

மேலும்

மீண்டும் அதே கவிதையை பாராட்டியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய யாப்பெழில் கவிஞரே ! 18-Jun-2019 6:34 pm
கவின்மிகு படைப்பு. 18-Jun-2019 6:20 pm
ஆஹா அருமை அருமை அறுசீர் விருத்தப் பா தங்கள் எண்ணம்போல் எல்லாம் இனிதாகட்டும் நல்லாட்சி மலரட்டும் நாடு நலம் பெறட்டும் ! மிக்க நன்றி கவிப்பிரிய யாப்பெழில் கவிஞரே ! 17-Apr-2019 10:01 am
இதோ கவின் சாரலன் உங்களுக்காக ஒரு புத்தாண்டு வாழ்த்து....அறுசீர் விருத்தப் பா.. புத்தாண்டு நல்லாண்டாய் மலரட்டும், புதுமைகளைக் கொண்டுலகம் மகிழட்டும்; மெத்தனங்கள் சுயநலங்கள் குறையட்டும்; மேன்மைதரும் படைப்புகளும் விளங்கட்டும்; எத்தனங்கள் பல்லுயிர்கள் பேணட்டும்; இயற்கையுடன் நம்வாழ்வு சிறக்கட்டும்; புத்தியுள்ள ஆட்சிபல தோன்றட்டும்; புவிவாழ்வில் மகிழ்சியுமே பொதுவாகட்டும்! ========+++++++++======== , எசேக்கியல் 17-Apr-2019 9:44 am
காளியப்பன் எசேக்கியல் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2019 12:47 pm

வெண்பா..
கோளனாய்த் தானே குறைசொல் லிலக்கியங்கள்
நாளுமே செய்கிறோம்! நல்லதாய் –தோளெடுத்(து)
என்செய்வோம் நன்மை? எவர்திருந்த? நாம்மாற
முன்செய்வோம் நல்ல முனைந்து!
====++++=====
கலிவிருத்தம்
விந்தியமே எல்லையென வேண்டி வகுத்திடினும்
இந்தியனே தமிழன் இல்லையென யார்சொல்வார்?
சிந்தையால் பாரதத்தின் சிறப்பெண்ணிப் பாடுபட
வந்திடுவோர் மொழிகடந்த இந்தியரே இல்லையோ?
====++++=====
தரவுக் கொச்சகக் கலிப்பா..
ஊடாடும் ஆசைகளால் உள்ளங்கள் குட்டையென
ஓடாத நதியாச்சோ? ஊதியிதைப் பெரிதாக்கும்
ஊடகமாம் இரசாயன உரங்களினால் கெட்டோமோ?
தேடுவமோ பாரதமாம் திரவியத்தை இனியேனும்!
=========++++++++========
நாட்டின் மேலுள்

மேலும்

காளியப்பன் எசேக்கியல் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2019 2:47 pm

நேரிசை வெண்பா

காற்றோடு சேர்ந்த கடுநெருப்பி னுங்கொடிதாய்
வீற்றோடு வெய்து விரைந்துமே – மாற்றான
கோளன்சொல் மூண்டு குடிகெடுத்துப் பல்லுயிர்கள்
மாளப் புரியுமே மற்று. 145

- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கோளனுடைய மாறுபட்ட சொல் காற்றோடு சேர்ந்த நெருப்பினும் கொடிதாய் எங்கும் விரைந்து பரவி, மற்றவரின் குடி கெடுத்துப் பல உயிர்கள் இறந்து படும்படி வெந்துயர் விளைவிக்கும் எனப்பட்டது.

கடுநெருப்பு என்றது. அதன் அடுநிலை கருதி. வீற்றோடு விரைதல், யாதும் எதிரே தடுத்து ஆற்ற முடியாதபடி பாய்தல். வீறு – வலிமை, மாறு - பகை, தீமை.

கோள் கடுமையாய்ப் பரவி அடுத

மேலும்

அழகிய எண்ணமொன்றை விதைத்தது, உங்களின் இப்பதிவு,,,,,,,அதாவது கோளனாய்த் தானே குறைசொல் லிலக்கியங்கள் நாளுமே செய்கிறோம்! நல்லதாய் –தோளெடுத்(து) என்செய்வோம் நன்மை? எவர்திருந்த? நாம்மாற முன்செய்வோம் நல்ல முனைந்து! ====++++===== 04-Apr-2019 12:17 pm
காளியப்பன் எசேக்கியல் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2019 7:59 pm

நேரிசை வெண்பா

மன்றில் ஒருவன் மறுகி மனமுளைய
நன்றில் உரையை நவிலுநா - என்றுமே
ஈனநா வாகி இழிந்துபின் பேசாத
ஊனம் அடையும் உணர். 156

- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலர் குழுமிய சபையில் ஒருவன் உளம் மறுகி உளைய இழிவுரை கூறுகின்ற இன்னொருவன் நா, பின் மொழி வழக்கு அற்று ஈனமான பிறப்பில் இழிந்து படும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மன்று - பலர் கூடியிருக்கும் இடம்.

நன்று இல் உரை – நன்மை பயக்காத சொற்கள், மனிதனுடைய மானம் கெடும்படியான ஈன மொழிகள். நவிலல் - சொல்லல்.

தனியே இருக்கும் பொழுது இகழ்ந்து பேசுவதினும், பலர் நடுவே ஒருவனைப் பழித்துக் கூறின்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 04-Apr-2019 2:33 pm
கூடினார் முன்பின் குறைசொல்லி நிற்பாரை நாடினார் இல்;அந் நயவுரையைத்-தேடிக் கொடுத்தீர் மிகவருமை! கொண்டாடு கின்றோம் எடுத்தவும் செய்கை இதை! ------+++++-------- 04-Apr-2019 12:01 pm
காளியப்பன் எசேக்கியல் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2019 5:48 pm

பொருள்வழிப் பிரிவு…
(பிரிவு ற்றிப் பேசவும் விரைந்த தலவியை எண்ணித் தலைவனின் தனிமொ]ழி)
(அறுசீர் விருத்தம்)

கூடிக் களித்த பெண்மயிலை;
=கொஞ்ச நினைத்து வந்தவளைத்
தேடிச் சென்றோர் அயல்நாட்டில்
=தேவை யான பொருளீட்டி
ஓடி வருவேன் உன்கழுத்தில்
=ஒருமண மாலை யாகிடுவேன்
வாடி இருத்தல் தவிரெனவே
=வாய்மூ டிடுமுன் பிரிந்தாளே!

ஆசைக் கனலைக் கண்மூட்டும்;
=அமுதைக் கொவ்வை இதழூட்டும்!
மீசை முறுக்கி நான்காட்ட
=மின்ன லுருவம் பாய்ந்தோடும்!
காசை ஈட்டி வருவதனைக்
=கன்னி கேட்கச் சொல்லிடுமுன்
பூசல் காட்டிப் போயினளே!
=பொறுக்க மாட்டாள் பிரிவினையே!

காட்டு மயிலாய் ம

மேலும்

அறுசீர் விருத்தம் எல்லாம் எனக்கு எழுத தெரியாது. ஆனால் படிப்பதற்கு நன்றாய் இருக்கிறது. மார்பில் சாய்ந்த மதுக்குடம் மரணம் போக்கும் என்னமுதம் சோர்வில்லாத இலக்கியம் உவமை ரசிக்கும்படி இருக்கிறது. 12-Jan-2019 6:04 pm
காளியப்பன் எசேக்கியல் - காளியப்பன் எசேக்கியல் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2016 1:36 pm

மேலும்

வணக்கம் தங்கள் தமிழ் மரபுப்பா இலக்கணம் - : ---தமிழ் கற்க விரும்பும் உலகத் தமிழர்களுக்கு தங்கள் தமிழ் இலக்கிய இலக்கண படைப்பு போற்றுதற்குரியவை தமிழ் வளர்க்க தமிழ் அன்னை ஆசிகள் 03-Dec-2016 5:51 am
காளியப்பன் எசேக்கியல் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 12:53 pm

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 19-Sep-2016 7:08 pm
போற்றுதற்குரிய கவிதை (வெண்பாக்கள்) பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Sep-2016 5:19 pm
தங்கள் தெளிவான கருத்திற்கு நன்றி. 15-Sep-2016 2:44 pm
நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 15-Sep-2016 1:40 pm
காளியப்பன் எசேக்கியல் - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2016 11:23 am

மேகமாய் தேடி அலைந்து
வெள்ளி நிலவொன்றைக் கண்டேன்...
வெயிலில் உருகாமல் இருக்க
விழி இமைகளால் அதனை மூடினேன்...
என் இமைகள் கருகிப் போனதே...
இரு விழிகளும் தீயாய் எரியுதே......

மேகமாய்......

நாணல் போல நானும்
புயல் காற்றில் வளைந்து நின்றேன்...
காதல் சோகம் எனைத் தீண்ட
தென்றல் காற்றில் சாய்ந்துப் போனேன்......


உதிரம் சொட்டும் இதயக் கூட்டில்
காதல் மூச்சை நிரப்பி வைத்தேன்...
உன் வாய் மொழியும் வார்த்தை
அம்புகள் கிழிக்கவே உணர்வின்றி உறைந்தேன்......


வளர் பிறை ஒன்று இல்லையென்றால்
வானத்தில் நிலவும் உதிக்காது...
என்னுடன் நீயும் இல்லையென்றால்
உயிர் மூச்சும் உடலில் நிலைக்காதே......

மேலும்

உண்மை தான் நண்பா. வலிமை பொருத்தே பலமா?.. பலவீனமா?... நன்றிகள் நண்பா... 31-May-2016 3:43 pm
நெஞ்சில் நிலைத்த காதல் ஆணி போல் உறுதியாக இருக்கும் என்றால் காலமும் காதலை ஆழ முடியாது..சில நேரம் காதல் வலுவின்றி இருக்கும் என்றால் ஊசியின் முனையும் பெரும் சுமையாகி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 4:55 pm
காளியப்பன் எசேக்கியல் - சீத்தாராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2016 2:17 pm

உன்னை நினைத்து உறங்கிய 
அழகிய இரவுகள் என் 
இறந்த காலம் !!!

உன்னை நினைப்பதால் 
உருகும் நேரம் என் 
நிகழ்காலம் !!!

உன் நினைவுகள் இன்றி 
நிரந்தரமாக உறங்க போகும் 
நிமிடம் என் 
எதிர்காலம் !!!


மேலும்

தங்களது வருகையில் மகிழ்ந்தேன் கருத்துக்கு நன்றி மர்.puunthalir 24-May-2016 4:41 pm
ஏன் இந்த நிலைமை? மனதை மாற்றி நல்ல சிந்தனையை வளர்த்து அரிய பல செயல்களைப் புரிந்தால் அவள் தேவதை இல்லை அற்ப மானிடப் பிறவி என்பதை உணர்வீர். 24-May-2016 2:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (157)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (160)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (160)

தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே