கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்

எடுத்த பொருளினை எப்படிச் சொல்லலாம் என்பதனை (17)
கொடுத்த படிக்கது குன்றுதல் இன்றியே கூட்டிடுவாய் (17)
அடுத்துப் படிப்பவர் அங்கது கொண்டுடன் ஆம்பொருளை (17)
உடுக்கை யதுபோல் உதவியாக் கொண்டுயிர் உய்வகவே (17)
++
நெஞ்சில் பகையுடன் நேரில் சிரிக்கும் நிலவெனவே (16)
வஞ்ச மனத்தினர் வந்தார் முகமன் வலிந்துசொலி (16)
அஞ்சல் அறிகில மென்பார் எனவே அவர்மகிழச் (16)
செஞ்சொல் அரற்றினம் செய்தந் திரமது செம்மைதானே! (16)
++
விஞ்சியெந் நாட்டையும் வீழ்த்தியிப் பாரோர் வியப்பரென
துஞ்சுவர் என்றுளம் தூக்கியே தன்னுள் துணிந்தவராய்
மஞ்செது பேசினும் மாற்றதற் கொன்றும் மதித்துரையார்
அஞ்சவே நுண்மி அனுபிப் பலரை அழிப்பதென்னே!
++
எசேக்கியல்

எழுதியவர் : யாப்பணிவகுப்பு-01 (25-Jun-20, 8:09 pm)
பார்வை : 41

மேலே