நிலாசூரியன் - சுயவிவரம்

(Profile)



நடுநிலையாளர்
இயற்பெயர்:  நிலாசூரியன்
இடம்:  (தமிழ்நாடு)
பிறந்த தேதி :  15-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2010
பார்த்தவர்கள்:  6402
புள்ளி:  1837

என்னைப் பற்றி...

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
யோசிப்பவன்
இன்பத்தையும் துன்பத்தையும்
நேசிப்பவன்...

நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!!

www.nilasuriyan.blogspot.com என்ற தளத்தில் மேலும் எனது படைப்புகளை காணலாம்.

என் படைப்புகள்
நிலாசூரியன் செய்திகள்
நிலாசூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2011 9:11 am

என் கவிதைகள்
ஒரு நாள்
உற்ச்சாக தேரில் ஏறி
ஊர்வலம் போகும்...

புத்தாடை உடுத்திக்கொண்டு
பூச்சூடி பார்க்கும்...

பனித்துளியாய் மாறும்
பவளம்போல் ஜொலிக்கும்...

ஆனந்தம் அள்ளிக்கொண்டு
ஆகாயம் போகும்...

தேனள்ளித் தெளித்துச்செல்லும்
தென்றலாய் மாறும்...

கல்லாய் மண்ணாய் மரமாய்
மரித்துகிடக்கும்
என் கவிதைகள்
உயிர்பெற்று எழும்
உன் பெயரை தொழும்...

மேலும்

நிலாசூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2022 5:25 pm

மனிதனின் உயிர்
மரம்போட்ட பிச்சை...

இங்கு பலருக்கும்
புரியவில்லை
உழைப்பிற்கு மிஞ்சிய
வருமானம் பணமல்ல பாவமென்று...

பாவம் பலவகைபட்டாலும்
அத்தனைப் பாவங்களையும்
இந்த ஞாலத்தில்
மனிதன் மட்டுமே செய்கிறான்

முல்லைக்குத் தேரையும்
மயிலுக்கு போர்வையும்
கொடுத்து மனிதம் உயர்ந்து நின்ற
மரபு மரித்துபோய்விட்டது

இன்று மனிதனைவிட
விலங்குகளே பரவாயில்லை
என்றாகிவிட்டது

ஒட்டுமொத்தமாக
தன்னை மற்றவர்களுக்கே
அர்ப்பணித்து கொண்ட
மரத்தின் தியாகத்திற்கு முன்பு;
மனிதனும் கடவுளும் எம்மாத்திரம்?

நல்ல நேரம் பார்த்துதான்
சுவாசிக்கும் காற்றை
வெளியிடுவேன் என்று
மரமே நிபந்தனை
விதி

மேலும்

நிலாசூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2022 9:11 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுதுதான் இந்த தளத்தின் பக்கம் வந்தேன், பல்லாண்டு காலம் இந்த தளத்தில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன், இந்த தளம் கவி அல்லது கருத்து எழுத கற்றுக்கொள்ளும் பயிற்சி பட்டறையாகவே நான் பயன்படுத்தி வருகிறேன், அந்த வகையிலே இந்த தளம் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கி இருப்பதை நான் என் அனுவபத்தால் உணர்ந்து இருக்கிறேன், அதற்கு கவிதை மரபறிந்த பெரியாயோர்களின் வழிகாட்டுதலே மறுக்கமுடியாத முக்கிய காரணமாகும்.

ஒரு கவிதைக்கு யாப்பு, அணி, சொல், பொருள், போன்ற இலக்கண கவிதை மரபு மிக அவசியம், ஆனால் அவைகளை எல்லாம் நான் கற்றவன் அல்ல, என் சிறு கல்வியையும், சிற்றறிவையும் நா

மேலும்

நிலாசூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2022 9:06 pm

பொய்யும் புரட்டும் வெல்லும் - அது
புரிதலின்றி செல்லும்
வீணாய் வாயை மெல்லும் - அது
தானாய்த் தன்னை கொல்லும்

அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது
கெடுத்தவர் கையை பின்னும்
படுத்தவர் மீது நடக்கும் - அது
படித்தவர் என்றே மிடுக்கும்

தலையை ஆட்டி நடிக்கும் - அது
வலையை நீட்டி பிடிக்கும்
களையை ஊற்றி வளர்க்கும் - அது
குளையில் ஏறி மிதிக்கும்

பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது
வேலாய் சொல்லைத் தீட்டும்
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது
கதவுக்குப் பின்னால் ஏசும்

நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம்
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வ

மேலும்

நிலாசூரியன் - கௌசல்யா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2022 8:40 pm

உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!!
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!- கௌசல்யா சேகர்

மேலும்

உண்மைதான்..... 01-Nov-2022 1:26 pm
நிலாசூரியன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2022 4:12 pm

கலிவிருத்தம்
(கூவிளங்காய் விளம் மா காய்)

என்னதவம் செய்ததோ எழுத்தும் உமைப்பெறவே
சொன்னவைய னைத்துமே சோர்வின் றியுலவிட
மன்னவரே தாமென மாண்பாம் எழுத்தினுக்குள்
சொன்னவண்ணம் செய்குவேன் சொற்கேள் சக்கரையே!

– வ.க.கன்னியப்பன்

கருத்து: திரு சக்கரை வாசன் அவர்கள்

முதல்சீர் நான்கும் ஒரே வகை காய்ச்சீர்கள்.

மற்ற அடிகளிலும் இரண்டாம் சீர் விளம், மூன்றாம் சீர் மா, நான்காம் சீர் காய்.

நான்கடிகளிலும் 1, 3 சீர்களில் தகுந்த மோனை.

மேலும்

நயம் மிக்க வரிகள்....! 29-Oct-2022 5:13 pm
ஐயா அவர்கட்கு நன்றி நன்றி மிக்க நன்றி 29-Oct-2022 5:10 pm
நிலாசூரியன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2022 2:29 am

பசை
******
தூரிகையில் பற்பசை ஏந்திட
விடியும் பொழுதுகள்
சவரப் பசையுடன்
முகச் செழிப்பாகி
வாசனைப் பசையுடன் மணக்கத் தொடங்குகிறது

ரொட்டியில் அம்மா தடவிக்கொடுக்கும்
சட்னிப் பசையோடு
பசையுள்ளத் தொழிலுக்கான தேடலில்
விண்ணப்பம் சுமக்கும் கூடுகளுக்கு
ஒட்டுப் பசையாகிக் காத்திருக்கும்
அசையாத நம்பிக்கைகள்

நிராகரிப்பு பசைதடவிய எதிர்பார்ப்புப் பலகைகளில்
கால்வைத்துச் சிக்கிக்கொள்ளும்
எலியாகிய வாழ்வியலில் நின்று
வெளியேறப் போராடவென்று
வாங்கியதான பட்டங்கள்
பெயருக்குப் பின்னால் ஒட்டியும்
ஒட்டாமலுமென்று
பசையற்று நிற்கையில்
பார்ப்பவர் கண்களில்
பசையின்றியே ஒட்டிக் கொள்கிறது
சி

மேலும்

மிக்க நன்றி நிலா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு.. 30-Oct-2022 1:32 am
இங்கே கல்விப் பசையோடு சுவர்களாய் நிற்கும் இளைஞர்களுக்குப் பதாகைபோல் ஒரு தொழில் அமைந்தால் போதும் ஊரே நிமிர்ந்து பார்க்கும் அதற்காகவேனும் கழுத்து வளையாத சமூகமே சற்றே இவர்களைக் குனிந்து பார்..... ---( நிமிர்ந்து பார்க்க வைத்த வரிகள்.). 29-Oct-2022 5:10 pm
நிலாசூரியன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2022 7:09 am

கோவில்கள் எவ்வளவு
பிரம்மாண்டமாக இருந்தாலும்
கருவறை எப்போதும்
எளிமை தான்..

வளர்ந்து போகும்
ஜடா முடியை
பிரம்மாண்டமாக இருந்தாலும்
பக்தரைப் பார்க்கும் அவன்
உள்ளம் எளிமை தான்..

வசதியாக வீடுகளில்
வாழ்வதைவிட எளிமையான
வீடுகளில் தான்
ஆனந்தங்கள்
பொங்கி வழியும்..

மேலும்

வசதியாக வீடுகளில் வாழ்வதைவிட எளிமையான வீடுகளில் தான் ஆனந்தங்கள் பொங்கி வழியும்.. உண்மைதான்,,,, ஒவ்வொருநாளும் போராடி வாழ்கின்ற ஏழையின் சிரிப்பு விலைமதிப்பில்லாதது... 28-Oct-2022 9:52 am
நிலாசூரியன் - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2022 1:15 pm

இந்த நாட்டிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் பலவேறு பிரச்சனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, ஆனால்! அவைகள் அனைத்தையும் இந்த உலகம் அறிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சட்டப்படியான ஜனநாயக உரிமைகளை நுகர்வதற்கும், ஒவ்வொரு சாமானிய தனி மனிதனும் இந்த நாட்டிலே கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதிமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்ற கணிணிப் பணியாளர்களின் வாழ்நிலை துன்பமும் துயரமும், வறுமையும் வாடலும் நிறைந்ததாக இருக்கிறது.

2009ஆம் ஆண்டு தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகத்தில்

மேலும்

நிலாசூரியன் - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2016 11:57 am

நானும், நீயும்
ஒரே சாயலோடுதான் இருக்கிறோம்.

இந்த தேசத்தின்
எதிர்காலம் குறித்த கனவுகள்...
உனக்கும், எனக்கும்
ஒரே மாதிரியானவை.

கணியன் எழுதிய
"யாதும் ஊரே ...யாவரும் கேளிர்"
நமது அன்பின் தொடர்ச்சிதான்.

உனது உதடுகளின் புன்னகை...
எனது பாரா-ஒலிம்பிக் தங்கத்தினால்
எனில்...
எனது அறிவு ஒளிர்கிறது
அனந்தமூர்த்தியின் எழுத்துக்களால்.

நானும், நீயும், விலங்குகளும் கூட...
நீர் அருந்தக்
குளம் தந்த பரம்பரைகள்
நம்முடையவை.

வாழ்வின் வலியில்...
நீரின்றிக் கருகுகிறது
நம் தேசத்தின்
வேராய் இருக்கும் எனது குறிஞ்சி.

அரசியலின் புனைவுகளால்...
இடைவெளிகளாகி...
நதியின் பாதைகளில்

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சார். 11-Oct-2016 11:57 am
வித்தியாசமான சிந்தனை நன்று - மு.ரா. 09-Oct-2016 11:00 pm
நிலாசூரியன் - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2016 12:08 pm

எது கொண்டும்
திறக்க இயலாத மௌனம்
உன்னுடையது.

இடைவெளியற்று அலையும்
உன் பார்வைகளோ...

அலைகளடங்கிய நீர்ப்பெருக்கின்
நெரிசலால் தளும்புகிறது.

மிதந்து படியும் உன்சொற்கள்
மெல்லக் கீழிறங்குகிறது
துயரத்தின் கனம் தாளாமல்.

சுருண்ட பூனையாகி...
ஞாபகங்களின் வலியோடு
அரவமின்றி அலைகிறது
உனது நாட்களின் பயணம்.

மலராகி சரிந்த
உனது புருவ நெரிப்புகள்...
இன்று விரிசல்களாகிவிட

அதன் விளிம்புகளில்
நான் அறிந்தது
உனது அடையாளங்களையல்ல.

காலத்தின் எச்சம்
நிழல்களிலிருந்தும் முகம் தரக்கூடும்...
எனும்

அதீத நம்பிக்கையை
உனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

நீயும் அறியாமல்

மேலும்

பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) Shyamala Rajasekar மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Dec-2015 3:34 pm


 "ஆதாமின்  அப்துல்லா.." புதிய நாவல்.!
------------------------------     -------------------------------        ---------------------

வணக்கம் தோழர்களே..!

உங்களுக்கு நேரமிருந்தால்..,உங்களோடு கொஞ்சம் பேசலாமா..?

வெகுநாட்களாக மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதரின் வரலாற்றை,ஒரு நாவல் வடிவத்தில் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. 

முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு இங்கு பதிவு செய்யலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அதனை எழுதிமுடிக்கும் வரை நேரம் காலம் குறித்து எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் எழுதுவது  அவ்வப்போது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நல்லவேளை..தோழர்.அகன் அவர்களிடமும், தோழர்.ராம்வசந்த் கே.எஸ்.கலை,நிலாசூரியன் உட்பட சிலரிடம் இந்த நாவல் எழுதும் திட்டத்தை சொல்லி வைத்திருந்தேன். அவர்களும் என்னிடம் எப்போது பேசினாலும் ஏன் இன்னும் எழுதவில்லை..? என்பதையே முதல் கேள்வியாக கேட்கத் துவங்கிவிட்டனர்.  இனியும் கால தாமதத்திற்காக சொல்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இப்போது என்னிடம் இல்லையென்பதால்…இதனை எழுதிப் பதித்துவிட முடிவு செய்துவிட்டேன்.. ஹஹ்;ஹா.. ஹஹ்ஹா..!

ஒரே ஒரு அத்தியாயத்தையாவது முதலில் பதித்துவிட்டால், தொடர்ந்து ஓரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடுத்ததை எழுதிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானாக உருவாகிவிடும் என்பதாலும் ..இதனைத் துவங்கிவிட்டேன் என்றும் சொல்லலாம்..!

. “ஆதலினால் காதலித்தேன்..!” என்ற எனது நாவலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தளத்தில் அப்படித்தான். உருவானது. அதில் உங்கள் கருத்துக்களால்,வளர்ந்துவரும் ஒரு சிறிய எழுத்தாளனாக எனக்கும் அடையாளமும் கிட்டியது. அதற்காக உங்கள் எல்லோருக்கும் இன்னுமொரு முறை நன்றி..!


“இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கப்பா..?” என்று நீங்கள் ஒருவேளை சலித்துக் கொள்ளவும் கூடும்..!  பரவாயில்லை..நான் சங்கடப்படமாட்டேன். ஏனெனில்,எனது எழுத்துக்களை வாசிக்க நீங்கள்தான் உங்கள் நேரத்தையும், கருத்தையும் செலவிடப்போகிறீர்கள்..அதை எப்போது செலவிடுவது..? என நீங்கள்தான் முடிவு செய்யமுடியும்..! 

இப்போது இதனை வாசிக்க நீங்கள் வந்த இந்த சிலநொடிகளில்,நான் உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு சிறிய செய்தி என்னவெனில்,இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் துவங்குகின்ற,இந்த நாவல் ஒரு சாமானிய மனிதனின் ஒளிவு மறைவற்ற சரித்திரத்தைத்தான் பேசப்போகிறது.!

எனது வீட்டில் இப்போது இருக்கும் அந்த மனிதர்,சற்றே தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, நாளை உங்கள் வீட்டிலும் இருக்கலாம்..! 

நாவலைக்குறித்த செய்திகள் அவ்வளவுதான் தோழரே..! முதல் அத்தியாயத்துடன்-எனது கவிதைப் பகுதியில்- நாளை முதல் தொடர்ந்து சந்திப்போம்..! 

அப்புறம்..தற்போது தளத்தில் தோழர் பழனிக்குமார் அவர்களின் வாழ்க்கைத் தொடர், தோழர் கவிஜியின் ஊக்கத்தால் நம் தோழர்கள் பலரும் எழுதும் “ தேவதைகள் தூங்குகிறார்கள் “ தொடர்கதை, தோழர். சரவணா எழுதிவரும் நடைவண்டி எனும் தொடர், தோழர் ஜின்னாவின் முயற்சியால் நிறையத் தோழர்கள் பங்கேற்றுவரும் காட்சிப்பிழை எனும் கஜல் தொடர் ஆகியவை வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கின்றன. நீங்களும் அவற்றை ஆர்வமுடன் வாசித்து கருத்துக்களால் அவற்றை செழுமைப்படுத்தும் பணியில் பங்கேற்று வருகிறீர்கள்.!

 அதேபோல்..வாய்ப்பிருக்கும்போது,எனக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிறை குறைகளைச் சுட்டினால் நானும் மகிழ்வேன்.  

இந்த நாவலின் பெயர் "ஆதாமின்  அப்துல்லா.." 

மீண்டும் பேசுவோம்..!  

அன்புடன் 
பொள்ளாச்சி அபி

மேலும்

"தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் 2011 முதல் உங்களது தளத்தில் படிக்கவும் ஆவலாய் உள்ளது. அமெரிக்கா தமிழ் நண்பர்களும் உங்கள் படைப்புக்களை ஆவலுடன் படிக்கிறோம். இனியும் படிப்போம். ! " உங்கள் நண்பர்களும் இந்த வாசிப்பில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி தோழரே..அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவியுங்கள்.! 29-Dec-2015 11:04 am
வாருங்கள்..வாருங்கள் நிலா..! இந்த எழுத்துக்கள் இங்கேயேதான் கிடக்கும்.நேரம் இருக்கும்போது மெதுவாய்ப் படித்துக் கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பொங்கல் கவிதைப் போட்டி குறித்து வருத்தப் படவேண்டாம்.சூழல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.உங்கள் கடமைகளை முடித்துவிட்டு வாருங்கள்.தோழர்களின் ஒத்துழைப்போடு அடுத்த வருடம் நல்லபடியாக நடத்துவோம். 29-Dec-2015 11:03 am
வணக்கம். தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் 2011 முதல் உங்களது தளத்தில் படிக்கவும் ஆவலாய் உள்ளது. அமெரிக்கா தமிழ் நண்பர்களும் உங்கள் படைப்புக்களை ஆவலுடன் படிக்கிறோம். இனியும் படிப்போம். தமிழ் அன்னை ஆசிகள் வேண்டி பாராட்டுகிறோம் நன்றி. 28-Dec-2015 11:26 pm
இன்னும் சில முக்கியமான எனது சொந்த வேளைகளில் இருந்து நான் மீளவில்லை, ஓய்வு என்பது குறைந்து குறைந்து வந்து, மிகவும் குறைந்துவிட்ட காலமாகவே இக்காலம் எனக்கு காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது, இந்த வருட பொங்கல் கவிதைபோட்டிகூட நடத்த இயலா சூழலே தொடருகின்றது, நிச்சயம் ''ஆதாமின் அப்துல்லா'' வை வாசிக்காமல் விடமாட்டேன். இன்னும் கொஞ்ச காலங்களில் மீண்டும் பழைய நிலாசூரியனாகவே தளத்தில் நிச்சயம் வருவேன், தோழர்களின் படைப்புகளை வாசித்து மகிழ்வேன். வெற்றிகரமாக எழுதுங்கள் அண்ணா, எழுத்துக்களையும் எண்ணங்களையும் செதுக்குகின்ற சிற்பி நீங்கள், காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் பொறுமையாகவே எழுதுங்கள். அன்புடன் நிலாசூரியன். 28-Dec-2015 11:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (234)

கதிர்

கதிர்

சென்னை
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (234)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (236)

rajeshnannilam

rajeshnannilam

நன்னிலம். திருவாரூர்
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே