நிலாசூரியன்- கருத்துகள்
நிலாசூரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
உண்மைதான்.....
நயம் மிக்க வரிகள்....!
இங்கே கல்விப் பசையோடு
சுவர்களாய் நிற்கும்
இளைஞர்களுக்குப் பதாகைபோல்
ஒரு தொழில் அமைந்தால் போதும்
ஊரே நிமிர்ந்து பார்க்கும்
அதற்காகவேனும்
கழுத்து வளையாத சமூகமே
சற்றே இவர்களைக் குனிந்து பார்..... ---( நிமிர்ந்து பார்க்க வைத்த வரிகள்.).
வசதியாக வீடுகளில்
வாழ்வதைவிட எளிமையான
வீடுகளில் தான்
ஆனந்தங்கள்
பொங்கி வழியும்..
உண்மைதான்,,,, ஒவ்வொருநாளும் போராடி வாழ்கின்ற ஏழையின் சிரிப்பு விலைமதிப்பில்லாதது...
நன்றாக இருக்கிறது.....
பூ வாசம் வீசுகிறது கவிதை....
பூ என்றால் மென்மை மெல்லினம், பல்லாண்டு காலமாக முதல்பூ கவிதை மெல்லினமாகவே மென்மையாகவே இன்றும் தொடர்வது மிகுந்த அதிசயமாக இருக்கிறது, எப்பொழுதும் மனம் வருடும் மயிலிறகாய் உங்கள் கவிதை. பல்லாண்டுகளுக்கு பிறகும் இந்த தளத்தில் உங்கள் கவிதை வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி.
வணக்கம் ஐயா, நான் தற்பொழுது தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன், திருமணம் குடும்பம் பிள்ளைகள் என்று பொறுப்புகள் கூடிவிட்டக் காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக இணையதளங்கள் பக்கம் நேரம் ஒதுக்கி வர இயலவில்லை அய்யா, மறவாத தங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா.
நன்றாக இருக்கிறது...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்துப் பக்கம் வந்தேன், வந்ததும் தங்கள் படைப்பை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்....
இன்னும் இன்னும் தொடரட்டும் ஐயா....
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்துப் பக்கம் வந்தேன், வந்ததும் தங்கள் படைப்பை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்....
இன்னும் இன்னும் தொடரட்டும் ஐயா....
நல்லதை விதைப்போம்!
நல்லதையே அறுவடை செய்வோம்!
நன்று....
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்று என்றால் ஏன் சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவிக்கப்படவில்லை? ஏன் சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில்கூட இல்லாமல் ஒழிந்து போனது? திராவிட மொழிகள் என்ற ஒன்று இல்லை என்றால் கால்டுவெல், ஈராஸ் பாதிரியார், மார்க்ஸ் முல்லர் போன்ற மொழியியல் அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய்யா? ஆரிய புராணங்கள் ஏன் திராவிடம் திராவிட தேசம் என்று சொல்கின்றன? 2000 ஆண்டுக்கு உன் தோன்றிய ரிக்வேதம் பழைய நூல் என்றால் 3000 ஆண்டுக்கு முன் தோன்றிய ஓலைச்சுவடிகள் புதியனவா? திருக்குறளிலோ தொல்காப்பியத்திலோ ஏன் வடமொழிகள் இல்லை? இந்து மதம் மகாவிஷ்ணு ஷிவன் என்பதெல்லாம் காணக்கிடைக்கவில்லை? விரிவான தகவல் தந்தால் என் அறியாமையை போக்கிக்கொள்வேன்.
இன்னும் சில முக்கியமான எனது சொந்த வேளைகளில் இருந்து நான் மீளவில்லை, ஓய்வு என்பது குறைந்து குறைந்து வந்து, மிகவும் குறைந்துவிட்ட காலமாகவே இக்காலம் எனக்கு காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது, இந்த வருட பொங்கல் கவிதைபோட்டிகூட நடத்த இயலா சூழலே தொடருகின்றது, நிச்சயம் ''ஆதாமின் அப்துல்லா'' வை வாசிக்காமல் விடமாட்டேன். இன்னும் கொஞ்ச காலங்களில் மீண்டும் பழைய நிலாசூரியனாகவே தளத்தில் நிச்சயம் வருவேன், தோழர்களின் படைப்புகளை வாசித்து மகிழ்வேன்.
வெற்றிகரமாக எழுதுங்கள் அண்ணா, எழுத்துக்களையும் எண்ணங்களையும் செதுக்குகின்ற சிற்பி நீங்கள், காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் பொறுமையாகவே எழுதுங்கள்.
அன்புடன்
நிலாசூரியன்.
சென்யையும் ஏரிகளும்
மோகவும் - மிகவும்
இயற்க்கை அப்பப்போ தனது சீற்றத்தை வெளிபடுத்தி மனிதர்களுக்கு பெரும்பாடத்தை புகட்டிக்கொண்டுதான் இருக்கின்றது,
மழை பெய்து ஓய்ந்த சாலையில் கொஞ்சம் வெயில் இருந்தது, அது உடம்பிற்கு உனக்கையாக இருந்தது, யாருமற்ற சாலையில் காலாற நடந்து சென்றுகொண்டு இருந்தேன், அது கொஞ்சம் புதுமையான ஊர் என்பதால் காலநிலை கொஞ்சம் வித்தியாசமாகவேபட்டது.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாங்க தம்பி ஏன் நடந்து போறீங்க, வண்டியில ஏறுங்க என்று வலிய என்னை இருசக்கர வாகனத்தில் ஏற்றிகொண்டார், வேண்டாங்க நான் நடந்தே வரேன் என்று சொல்லிப்பார்த்தேன் அவர் விடவில்லை, ஆகையால் வேறு வழியில்லாமல் நானும் ஏறிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
அவர் ஏற்கனவே அந்த ஏரியாவில் என்னை பார்த்து இருப்பார் போல் இருக்கிறது, ஆனாலும் எங்கு தங்கி இருக்கீங்க என்று கேட்டார், நான் இடத்தைக் கூறினேன், அது சரி எண்ணப் பண்றீங்க என்றார், ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி வேலைப் பார்த்துகொண்டு இருக்கிறேன் என்று கூறினேன், அப்படியா... ஓ...ஹோ, நீங்க நம்ம ஆளுதானே? என்றார், எனக்கு புரியாததை போல் என்ன கேட்குறிங்க என்று மீண்டும் கேட்டேன், நீங்க கவுண்டர்ஸ் தானே? என்று அவர் அழுத்தமாக கேட்டார்.......!!!!!!!!!!!!!!
சுனாமி, தானேப்புயல், பூகம்பம் இவைகளுக்கு முன்பே அம்பேத்கர், அய்யா பெரியார் இப்படி எவ்வளவோ இருக்கு, ஆனால் திருந்திவிடுமா இந்த மனித ஜென்மம்? மோகவும் கடினம் தோழா................! படைப்பு நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அம்மா தனனது பெயரனை கையில் வைத்திருக்கிறார்கள் அய்யா, அதாவது எனது தங்கையின் மகனை வைத்திருக்கின்றார்கள்.
தாங்கள் வரவில் மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் அய்யா....
நாம் வாக்களித்து நமக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு நீதி மீட்கும் சம்பவம் ஆகும் தோழரே... நானும் இந்த விடயத்தை ஒரு மாதத்திற்கு முன்பே இணையதளங்களில் பகிர்ந்தேன், இன்னும் மிக குறைவான நாளே இருக்கின்றது இந்த மாதம் 10 ஆம் தேதிக்குள் தோழமைகள் இதைப் பகிர்ந்து வேகமாக வாக்களிக்க வேண்டும்.
தாங்கள் வரவில் மிகுந்த மகிழ்ச்சி.
மிக்க நன்றிகள் அக்கா.