ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள்
உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் பல தமிழ் சொற்கள் இருக்கின்றன. இதையே சிறிது தலைகீழாக மாற்றி ரிக் வேதச் சொற்கள் இன்று வரை தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் ஸர்வ ஸாதாரணமாகப் பயன்படுகின்றன என்றும் சொல்லலாம்.
ராஜா:-
இந்தச் சொல் காஷ்மீர் முதல் இலங்கையிலுள்ள கண்டி வரை மனிதர்களின் பெயர்களில் காணப்படுகிறது.
தமிழ் இலக்கண விதிப்படி சொற்கள் ச, ஞ, ல, ர — முதலிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. இதனால் அ , உ, இ போன்ற உயிர் எழுத்துக்களை அந்தச் சொற்கள் முன்னால் சேர்த்துக் கொள்வோம்.
இதனால் லோகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை ‘உ’லகம் என்று தமிழில் சொல்லுவோம்.
ராஜா என்ற ரிக்வேதச் சொல்லை ‘அ’ரசன் என்று தமிழில் செப்புவோம்.
மனது என்ற சொல் ரிக் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் உண்டு.
ராஜா என்ற சொல் ரிக்வேதத்தில் வரும் இடங்கள்:
ராஜன் -ரிக்.3-43-5, 5-54-7
அதர்வ-4-22-3-5; 8-7-16
இது தவிர ராஜ என்ற (prefix) முன்னொட்டுடன் ஏராளமான சொற்கள் உள.
மனஸ் என்ற சொல்
மனஸ் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.
மனஸ்- ரிக் 10-90 (புருஷசூக்தம்), யஜூர் வேதத்தில் பல இடங்கள்.
தமிழில் மனம்-
புறம்-183, அகம்-231, 273, 259, 377; நற்றிணை, கலித்தொகை, பரி பாடலில் நிறைய இடங்கள்
அரசன் (ராஜன்)- கலி-27, 129, குறு.276.
அரசர்- அக-338, புறம்-154
அரசு- நிறைய இடங்கள்
நான் நீண்ட நாட்களாக சொல்லும் புதிய கொள்கை:– உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ கண்டு பிடித்துவிடலாம். அதாவது உலகில் கலாசாரம் என்பதே இந்தியாவிலிருந்து சென்றது. இந்துக்கள்தான் அதை உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர். இதுவரை இதை வலியுறுத்த நான் எழுதிய பல கட்டுரைகளில் இன்றைய கட்டுரை மேலும் ஒன்று.
ஆரிய மொழிகள், திராவிட மொழிகள் என்று வெளிநாட்டினர் பிரித்தது தவறு. திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. இந்தியாவில் தோன்றிய மூல மொழியிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்த மொழிகளே தமிழும் ஸம்ஸ்க்ருதமும். இதனால்தான் அகஸ்தியரை அனுப்பி, தமிழுக்கு இலக்கணம் உண்டாக்கினார் சிவ பெருமான்.
சந்தி விதிகள், வேற்றுமை உருபுகள், சொற்களின் பொருள், அகர வரிசை முதலிய பல ஒற்றுமைகள் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் கிடையாது. தமிழ்-ஸம்ஸ்க்ருத உறவு உள்ளது போல வேறு எங்குமில்லை.
‘ஒன்’ one என்ற ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் ‘ஒன்று’ உள்ளது.
எயிட் eight என்ற ‘ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர்; ஆனால் ஆனால் தமிழில் ‘எட்டு’ உள்ளது.
மைன்ட்/mind ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் மனஸ்/ மனது உள்ளது.
மனஸ், எயிட் (அஷ்ட) என்பன தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் மனது =mind எட்டு=eight உருவாகியுள்ளது.
மற்ற எழுத்துக்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன. இதை நினைவிற்கொண்டால் எப்படி சொற்கள் மாறுபட்டு வளர முடியும் என்பது விளங்கும்.
ஆக ஒரு மொழி இப்படியெல்லாம் வளர முடியும் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகள்.
இவை காட்டும் உண்மைகள் என்ன?
உலகில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய ரிக் வேத, ‘ராஜா, மனசு’ இன்று வரை தமிழில் ஆழ வேரூன்றிவிட்டது. அதவது ரிக் வேத சொற்களை நாம் தினசரிப் பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறோம்.அரசன்,மனது என்பன ஸம்ஸ்க்ருத்த்த்தில் புழக்கத்துக்கு வந்த பின்னரே தமிழில் இடம் பெற்று 2000 ஆண்டுக்கும் மேலாக இன்று வரை நீடித்து வருகின்றன. இது ஓரிரு சொற்களுடன் நின்று போயிருந்தால் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்ட கால கட்டத்தில் மட்டும் இருந்திருக்கலம் என்று விட்டுவிடலாம். ஆயிரக் கணக்கான சொற்கள் இப்படி இருப்பதால் இவை ஒரே மூலத்தில் இருந்து வந்ததாகவே கொள்ள வேண்டும்.
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்று;
ஆராய்ச்சி
லண்டன் ஸ்வாமிநாதன்