மாளய பக்ஷம் ஆரம்பம்
இந்த 2018 ஆம் ஆண்டில் நாளது செப்டம்பர் 25 முதல் மஹாளய பக்ஷம் (மாளய பட்சம் )ஆரம்பமாகிறது. அதாவது புரட்டாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் அமாவாஸை வரையுள்ள 15 நாட்கள். இந்த ஆண்டு அக்டோபர 8-ம் தேதி மஹாளய அமாவாஸை வருகிறது. அது வரை பிரஹ்மணர்கள் வெங்காயம், பூண்டு முதலிய சில காய்கறிகளைத் தவிர்த் து தினமும் தர்ப்பணம் செய்வர். சிலர் அவர்களின் தந்தை இறந்த திதி அன்று செய்வர். இந்தக் காலத்தில் இறந்த நமது முன்னோர்கள், நம்மிடமிருந்து படைப்பு பெறவும் நமக்கும் நமது சந்ததியினருக்கும் நல்லாசி வழங்கவும் காத்திருப்பராம் எல்லோருக்கும் மாளய அமாவாஸை மிக முக்கியமானது.
லண்டன் ஸ்வாமிநாதன்