என்ன அதிசயம் நிகழ்த்துகிறாய் புன்னகை பூவாளியே
![](https://eluthu.com/images/loading.gif)
பூந்தென்றல் நுழைந்து
இளவேனிலாக வீசிட
பூந்தோட்டக்காரன்
பூவாளியால் நீர் தெளித்திட
பூக்கவில்லை தோட்டம்
புன்னகையில் நீ நுழைந்தாய்
பூத்து விட்டதடி தோட்டம்
என்ன அதிசயம் நிகழ்த்துகிறாய்
புன்னகை பூவாளியே !