தோல்வி
தோல்வி...
ஆம். எல்லோரும் வெற்றியை
கொண்டாடும்போது
தோல்வியே
உன்னை நான் போற்றுகிறேன்.
நீ இல்லையென்றால்
வெற்றியின் சுவையை
என்னால் சுவைத்திருக்க முடியாதே!
சறுக்கி நான் வீழும்போதுதான்
ஏறுவதின் கடினம்
என்னால் உணரமுடிந்தது.
அதன் உயரத்தை
தலை தூக்கி பார்க்க முடிந்தது.
ஒன்றே ஒன்றைத்தான்
நான் வேண்டிக்கொள்கிறேன்.
தோல்வியில் துவண்டிடாத
மனம் வேண்டும்.
எதையும் தாங்கிடும்
இதயம் வேண்டும்.
தளராத துணிவு வேண்டும்.
வாடிடாத ஆரோக்யமும் வேண்டும்.
ஆல்ப்ஸ் என்ன? எவரெஸ்ட் என்ன?
இமயத்தின் உயரமென்ன?
பசிபிக்கின் ஆழமென்ன?
ஒரு கை பார்த்துவிடும்
வெறியினை என்னுள்ளே
விதைத்திட்ட தோல்வியே
உன்னை போற்றுகிறேன்..