நீநீயாகவே

கண்கள் மூடி கிடைக்கும்போது
கருத்தில் எங்கும் நிறைகின்றாய்.
கண்கள் திறந்து பார்க்கும்போது
கனவாய் காற்றில் மறைகின்றாய்.

பார்க்கும் திசையெல்லாம் வியாபித்து
விஸ்வரூபமாய் நிற்கின்றாய்.
திசுக்களெல்லாம் நிறைந்து வாழ்வின்
ஆதாரமாய் இருக்கின்றாய்.

பாரதியின் கண்ணம்மாவா? - இல்லை
கவி கம்பனின் சீத்தம்மாவா?
இளங்கோவின் கண்ணகியா? இல்லை
இரவிவர்மனின் ஓவியமா?

எதுவும் இல்லை கண்ணே
எனக்கு நீ...நீயாகவே
வேண்டுமடி பெண்ணே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Oct-22, 9:30 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 208

மேலே