இலங்கேச்சுரம் - பிதாபலங்கேச்சுரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
இலங்கேச் சுரத்திற் கெழுசூதி கைக்கால்
இலங்கா கிராணியுமோ இல்லை - நலங்கொ(ள்)பிர
தாபலங் கேச்சுரத்திற் சாந்தமாஞ் சீதசுரம்
சோபமுறு நோயினமுஞ் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
இலங்கேச்சுரத்திற்குக் சூதிகாவாதமும், கிரகணியும், பிரதாபலங்கேச் சுரத்தினால் சீதசுரம், மூர்ச்சை முதலிய பிணிகளும் நீங்கும்.