மகாவசந்தகுசு மாகரம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

மகாவசந்த குசுமாக ரத்தால் வந்த
..வாயுகபம் பித்தமந்தம் வயிற்று நோய்கள்
விகாரவுன் மாதங்கா மாலை பாண்டு
..விசிநீரக் கட்டுசன்னி குன்மஞ் சோபை
யகாதக்ஷய காசசுவா சம்ர மேகம்
..அதிசாரம் எலும்புருக்கி விக்கல் மூலஞ்
சிகாவாதஞ் சுருங்குகுட்டம் மார்பு நோயுந்
..தீருமதற் கனுபானந் தெரியுங் காலே

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை அனுபானமறிந்து கொடுத்தால் முத்தோடம், மந்தம், வயிற்றுநோய்கள், உன்மத்தம், காமாலை, பாண்டு, விடபேதி, மூத்திர விந்து, சோபை, காசம், சுவாசம், பிரமேகம், கழிச்சல், என்புருக்கி, விக்கல், மூலம், சிகாவாதம், குட்டம், மார்பு நோய் இவை தீரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-22, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே