நடுத்தர_சாமானிய_ஆண்_வாழ்க்கை

#நடுத்தர_சாமானிய_ஆண்_வாழ்க்கை
செல்ல குட்டி!
சிங்க குட்டி!
என் உயிர்!
செல்வம்!
செழிப்பு!
யாவும் அவனே!
உலகம்!
என்று!
பெற்றோரின்!
ஒட்டுமொத்த ஊன்றுகோலாய் அவன்!!!

தவழ்ந்து!
தத்தி தாவி!
நடை பயின்று!
சிரித்து!
அழுது!!!

பள்ளி பருவத்தில்!
நன்கு படித்து!
கல்லூரி காலம் கடந்து!
ஆசைப்பட்டு படித்த படிப்பு!
பறவையாய் பறந்த காலம்!
காத்திருக்கும்!!!

ஒட்டுமொத்த!
கடமை!
வேலையில்லா காலம் !
நரகமாக நகரும் நாழிகை!!!

ஊதாரியாய் திரிபவன்!
என்று ஊர் சொல்லும்!
உதவாக்கரை!
என்று உறவும்!
மறைமுகமாக ஏசும்!!!

எங்கே செல்வேன்!
என்ன செய்வேன்!
ஒரே பிதற்றல்!
மனதில்!!!

உடன்பிறப்பிடமும் சொல்ல முடியாமல்!
தனிமையில்!
நினைத்து நினைத்து!
நித்திரையும் கலைந்து!
நித்தம் நித்தம்!
கண்ணெதிரே வரும் கடமையின் குரல்!

காதலும் கரம் சேராமல்!
வேதனையும்!
மனக்குமுறலும்!
உள்ளே அழுது!
வெளியே புன்னகைத்து!!!

அப்பாடா என்ன வாழ்க்கை!
என்று யோசிப்பதற்குள்!
இரணம் இன்னும்!
உச்சகட்ட ஆர்ப்பாட்டத்தில்!!!

ஊராரும்!
உறவும்!
அவ்வபோது!
வெந்த புண்ணில்!
வேலை பார்ப்பதுமாக!!!

அனைத்தும் கடந்து!
பிடிக்காத வேலையை!
குடும்பத்திற்காக ஓடி உழைத்து!
ஆசைகளை ஓரங்கட்டி!!!

அன்பை!
வெளிப்படுத்தவும் முடியால்!
சில சமயம்!
சினத்தையே!
சிரம் மேற்கொண்டும்!
சிரிக்க தெரியாமல்!
சிரித்து!!!


என்ன வாழ்க்கை வாழ்கிறோம்!
என்று கூட அறியாமல்!!!

அனைவரின் முன்!
நல்ல நிலையில்!
இருக்கிறேன் என்று வெளி வேஷம் போட!!!

உடல் அயர்ந்து!
சோர்ந்து!
உறங்கவும் முடியாமல்!!!

அகவை!
கடக்க கடக்க!
பிணியின் மடியில் விழுந்து!
மருந்தின் பிடியில் சிக்கி!
மரண படுக்கையில்!
படுத்து!
மயானத்தை நோக்கி
காத்திருக்கும்!
மனம்!!!

..... இவள் இரமி.....

எழுதியவர் : இரமி (26-Oct-22, 12:32 pm)
பார்வை : 36

மேலே