எதற்கும் நீ தயாராகவே இரு

வானமானால் உயர்ந்து நில்
பூமியானால் மிதிபடு, ஏர்
குழவுகளால் கிழிபடு

தீயானால் சுட்டெரி
தீக்குச்சியானால் சாம்பலாய் போ
மெழுகானால் உருகு

புயலானால் வீசு
சருகானால் பற
தென்றலானால் தழுவு

பாதையானால் நீண்டு செல்
பயணமானால் தொடர்ந்து செல்
கால்களானால் நடந்துகொண்டே இரு

விழியானால் பார்வை கொடு
வினையானால் வினை தீர்
விதியானால் அனுபவி

எதிரி என்றால் மோது
துரோகியானால் அழி
உண்மைக்காக உயிர் விடு

சோதனைகளை சாதனைகளாக மாற்ற
உனது எல்லா நாட்களிலும்
எதற்கும் நீ தயாராகவே இரு.


-----நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (17-Jun-15, 3:56 pm)
பார்வை : 117

மேலே