கவிதை இழப்பு
என் எழுதுகோல்
சற்று சயனித்த
சமயத்தில்
என் கைவிரல்கள்
கொஞ்சம் ஓய்வெடுத்த
நிமிடத்தில்
என் கண்கள்
ஏதோ கனவில்
கண்ணயர்ந்த தருணத்தில்
என் சிந்தனை
சிறிது இயக்கம் தொலைத்த
நொடியினில்
நீ என்னை
கடந்து சென்றதனால்
ஒரு கவிதையை இழந்துவிட்டேன்.
------நிலாசூரியன்.