அவள் வேதியியல் விளக்கம்

நீ ஒரு முழு வேதியியல் விளக்கம்!

அமிலம் தான் உன் பார்வை,
தொலைதூரம் நின்றாலும்
சரியாய் விசுகிறாய் என்மேல்!!

பென்சீன் வளைவு போன்ற
'இடை 'யை காட்டியே ,
என் உயிர் அணுக்களை தூண்டுகிறாய்!!!

உன் ஹைட்ரஜன் பேச்சும்,
என் ஆக்சிஜன் மூச்சும் கலந்தே
காதல் தாகம் தனிகிறதே நெஞ்சில்(H2O).

கூறுகள் கொண்ட உன் இதழும்,
உலோகம் போன்ற என் இதழும்
கலந்ததால் அதிலும் வேதியியல்
பொருள் தான் உருவாகுது,
கேட்டால் 'கலவை'யாம்!!!

காதல் இரசாயணம் பல வருடமாய்
தயாரித்தேன் என் நெஞ்சில்,
உன் ஒரு துளி வேர்வை அதில்
விழுந்ததால் வெடித்தே
விட்டது அது!
அன்று,புரிந்து கொண்டேன் உன்
வேர்வையும் ஒரு வேதியியல் விளக்கத்தை தருகிறது!!!

தண்ணீர் இறந்தே போயிற்றாம்!!
நீ குளித்ததில் ஆக்சிஜன் லெவல்
குறைந்து மூச்சுத்திணறி!
அதிலும் புரிந்து கொண்டேன்,முழு
வேதியியல் விளக்கம் உன் உடம்பிலே உள்ளது!!!!

லவோசியர் விளக்க முடியாத
வேதியியல் நீ!!!.

வேதியியல் கலவாத பொருள்களே
இல்லையாம்.
எங்கு திரும்பினாலும் வேதியியல்
கலவை இருக்கும் - அதனால்தான்
என்னவோ எங்கு பார்த்தாலும்
நீ தெரிகிறாய்!!

புரிகிறது

நீயும் வேதியியல் விளக்கம் தான்!♥

எழுதியவர் : இஜாஸ் (17-Jun-15, 3:06 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 1270

மேலே