Ijaz R Ijas - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ijaz R Ijas
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2014
பார்த்தவர்கள்:  553
புள்ளி:  171

என் படைப்புகள்
Ijaz R Ijas செய்திகள்
Ijaz R Ijas - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2020 12:32 pm

ஆழம் போனவுடன்
அறிவும் தெளிந்தது!
ஈரம் ஆனவுடன்
இதயம் கணத்தது!

தூரம் போனவுடன்
தனிமை புரிந்தது!
பாரம் கொண்டவுடன்
பழகத் தெரிந்தது!

வந்து போனதும்
வாழ்வை உணர்கிறேன்
வாழ வருபவர்
கணக்கில் வைக்கிறேன்.

கடந்து போவதே
நிலையென உணர்ந்ததும்
கடக்கப் போவதை
நினைத்து அழுவதா??

கொஞ்சம் சிரித்ததை
பிழையென கருதினால்
போகும் நாள்களும்
இடரென ஆவதா?

என்னை எண்ணியே
நான் நகர்ந்துபோகிறேன்
என்ன என்னவோ
அதில் கடந்து போகிறேன்.

மேலும்

Ijaz R Ijas - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2018 11:43 am

மனிதத் தனத்தின் முற்றுப்புள்ளியாய்
மனிதன் மனிதனை அழிப்பதுவோ?
மனித இனமே சரிந்து போயின்
நிலத்தை எலும்புகள் ஆள்வதுவோ?
வீசும் எரிபொருள் வீசியபோது
விழுந்து எரிந்தது பிஞ்சுகளோ!
காணும் காட்சிகள் கண்டபொழுது
கண்ணீர் மட்டும் மொழிகளோ!


தலைமுறை அங்கு தலைகளின்றி
தத் தளிப்பதை பாருங்கள்!
தாயின் சடலம் எதுவோ யென்று?
தேடும் பிள்ளையை பாருங்கள்!
நடப்பவை எல்லாம் எதற்கு என்று?
கேட்கும் கண்களை பாருங்கள்!
இன்னும் கூட சொல்ல வேண்டுமா?
அதோ! குழந்தை சிரிப்பை பாருங்கள்!


நாளைய ஔிகள் நிரந்தர இருட்டில்
வாழும் நிலைமை வருகிறதே!
எஞ்சிய உயிர்கள் கா ணொளியில்
உயிர் பிச்சை கே

மேலும்

அடக்குமுறைகள் என்ற சொல்லை பயன்படுத்தி சிரியாவை இரத்தக் காயங்களுடன் கொன்று குவிக்கிறது ஒரு புறம் எம்மை அடிமை என்ற கூண்டுக்குள் அடைத்து நாளை உனக்கும் இது தான் நிலை என்று படம் போட்டுக் காட்டி நாள் பார்த்துக் காத்திருக்கிறது அதே வல்லரசுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 8:27 pm
Ijaz R Ijas - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 8:33 pm

விலகிய நேரம் விழுந்த பாரம்
மனம் தாங்குமா? - அந்த
அழகிய காலம் கனவென உரைத்தால்
உயிர் தாங்குமா?

காற்றென சொல்லி காலம் கடக்க
தினம் பழகுறேன்! - இனி
வருகிற காலம் சில மணிநேரம்
உயிர் உறைகிறேன்!

பிரிவெனும் தழலில் விழுந்த பொழுது
ஆவி ஆனது ! - என்
இறுகிய மனதும் தனிமை தேடி
தோல்வி யானது!

ஜன்னல் ஓரம் நிலவின் ஔியில்
ஏக்கம் குறைக்கிறேன்! - இந்த
அழகிய தருணம் தினம் எதிர்பார்த்து
தூக்கம் தொலைக்கிறேன்!

நீயும் நானும் நடந்த பாதையில்
தண்ணீர் விழுகுதே! - மலர்
போற்றி படுத்த நீளப் பாதையில்
கண்ணீர் விழுகுதே!

உன்னை தேடி நான் அலைகின்றேனே
எங்கு இருக்கிறாய்!? - இந்த
தனிமை உலகில் ஆறுதலாக என்
மன

மேலும்

ஒரு வாரம் ஒரு மாதம் இல்லை ஒரு வருடம் அவளை நினைத்து கண்ணீர் சிந்த முடியும் ஆனால் உண்மையான அன்பு மரணம் வரை அவளையே நினைத்துக் கொண்டு இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 9:24 pm
Ijaz R Ijas - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 8:04 pm

ஒட்டி ஒட்டி வளந்தவ - இன்று
ஒத்துக்கிட்டு போறவ!
தாலி கட்டி !அண்ணன - ஐய்யோ!
அழவச்சு போறவ!

பச்ச வயல் நடுவுல - அவ
ஓடி ஓடி வருகையில்
கால் தடுக்கி விழுந்தவ - என்னுசுரு
தூக்கி வாரி போட்டுச்சு!

ஒத்தையடி பாதையில் - தூக்குவாளி
தூக்கிக் கிட்டு வருகையில்
உச்சு வெயில் இருந்துமே - மனசு
அவ சிரிப்பில் குளுந்துச்சு!

அந்த நாள் வந்ததே - அவ
தாவணிக்கு மாறுனா!
வெட்கப் பட்டு பாத்தவ! - உசுரு
நிம்மதியா இருந்துச்சே!

ஓடி ஆடி திரிஞ்சவ - இன்று
ஒட்டி ஒட்டி நடக்குறா!
பொண்ணு குணம் வருகையில் - அவ
வானவில்லா தெரியுறா!

ஒட்டி ஒட்டி வளந்தவ - இன்று
ஒத்துக் கிட்டு போறா!
தலையாட்டி போறவ - மனச

மேலும்

Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2017 6:36 pm

காங்கேயன் நடந்துவந்தா
காட்டுபுலி பதறுமடா!
காங்கேயன் பேரகேட்டா
கலங்கிவிடும் சிங்கமடா!

பெசபி்ஃக்கடல் ஆழத்தில்
தூண்டிபோட்டா வீரமில்ல!
ஜல்லிகட்டு விளையாட்டு
வீரத்தோட வேறுபுள்ள!

மரபணுவில் வந்தவங்க
மசிருகூட குறையாது!
உலகமழியும் தருணம்வரை
தமிழ்மொழியும் அழியாது!

திமில்கொண்டு வருகிறதே
எங்கஊரு நாட்டுசிங்கம்!
திமிர்கொண்டு எதிர்வந்தால்
எமனக்கூட முட்டுந்தங்கம்!

தமிழினத்தின் வீரமெல்லாம்
சிலவிளையாட்டே சொல்லுமடா!
அதிலொன்று ஜல்லிக்கட்டு
தடைசெய்வது பாவமடா!

ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம்
இறப்புக்கணக்கில் சேராது!
வீரன்விட்ட உயிர்தனதோ
உலகக்காற்றில் சேராது!

தியாகிகளின் பட்டியலில்

மேலும்

கோடி நன்றிகள்!!!!! 16-Jan-2017 8:20 pm
ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம் இறப்புக்கணக்கில் சேராது! வீரத்தின் உச்சம் 16-Jan-2017 7:15 pm
ஜல்லிக்கட்டின் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்ததில்லை! தங்கப்பதக்கம் தமிழ்பெறுமே பயத்தில்தான் சேர்ப்பதில்லை! உணர்வின் உச்சம் 16-Jan-2017 7:14 pm
புடிச்சாலும் உதைச்சாலும் புள்ளபோல வளர்கின்றோம்! இன்னொன்று ஜென்மத்தில் வாய்பேச வேண்டுகிறோம்! அன்பின் உச்சம் 16-Jan-2017 7:13 pm
Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2016 11:49 am

சின்னச்சின்ன திரையில் என்சிரிப்புகளோ மறையும்!
வண்ணவண்ண கனவுகள் வான்மேகமாய் போகும்!
எண்ணிஎண்ணி பார்த்து என்விழியிரண்டும் தேயும்!
வந்துபோகும் வாழ்வோ அதுஎந்தநாளில் முடியும்?

பிறந்தவுடன் நானோ பிள்ளையாக இருந்தேன்!
வளர்ந்தவுடன் தானே பையனாக ஆனேன்!
வயதுதாண்டும் பொழுது கிழவனாக ஆவேன்!
என்ன இருந்துமென்ன பிணமாக போவேன்!

வாழ்வுகளும் தாழ்வுகளும் வந்துவந்து போக
ஏற்றங்களும் சரிவுகளும் கண்டுமனம் நோக
துன்பத்தையும் இன்பத்தையும் எந்தவிதம் ஏற்க?
இந்தவாழ்வை தாங்கிநிற்கும் மனிதஇனம் வாழ்க!

மேலும்

கோடி நன்றி!!!! 28-Dec-2016 7:39 am
excellent வாழ்க்கை யதார்த்தத்தின் வலி(மை) மிக்க வரிகள் அருமை - மு.ரா. 27-Dec-2016 11:15 pm
அழகான அனுபவமிக்க வரிகள்... இது போன்ற வலிமைமிக்க பல கருத்துகளை தொடர்ந்து தருக! 27-Dec-2016 10:55 pm
Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 10:38 pm

மாரிச்சாமி ஒருத்தர்
மாண்டபோன கதகேளு!
மனசுக்குள்ள சோகத்த
மறச்சுவச்ச கதகேளு!

மண்டியிட்டு புடிச்சாரே
மத்தவங்க காலதான்
புடிச்சென்ன பலனய்யா?
தீரலையே சோகந்தான்!

உச்சிவெயில் அடிக்கையில
உசுருகொஞ்சோ நோகையில
பெத்தவள படிக்கவக்க
உழைச்சாரே விவசாயி!

உழைச்சுத்தான் பார்த்தாரு
பணங்காசோ சேரலையே!
கடன்வாங்கி பார்த்தாரு
வட்டிகூட குறையலையே!

மூட்டமூட்ட நெல்லெடுத்து
ஒதுக்கிவச்ச நேரத்துல
வந்ததம்மா மழையம்மா!
நனைச்சதம்மா மூட்டையில!

பேஞ்சுகெடுத்த மழையில
நனைஞ்சுருச்சே நெல்மூட்டை
வெட்டியா பூத்து
முளைச்சுருச்சே நெல்மூட்டை!

பட்டகடன் அடைக்கவே
பாடுபட்ட விவசாயி
மூட்டகூட நனைஞ்சுருச்சே
இனிய

மேலும்

ஹாஹா. ஆமாம் 27-Dec-2016 11:48 am
இனி வரும் நூற்றாண்டு விவசாயம் என்ற சொல்லையே ஆச்சரியமாக நோக்கும் 21-Dec-2016 9:11 am
Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 1:10 pm

சிறிய முள்ளையும்
பெரிய முள்ளையும்
நொடி முள்ளையும்
பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!
இருந்தும் வாழ்வில் நேரம் மட்டும்
கடந்து கொண்டே இருக்கிறது!

இது ஜென் கவிதை போல் உள்ளதா?

மேலும்

குதிரை வேகத்தில் நாம் ஓடினாலும் புயலை மிஞ்சி காலம் வெல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 8:52 am
ithu maari thane eluthanum zen poem na?! 21-Nov-2016 4:32 pm
சிறப்பு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 21-Nov-2016 4:19 pm
Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2016 8:01 am

தமிழகமே!! பொன்வீடே!!

கரு விட்டு நான் வந்த நாளினிலே
பொன் தாயே!உன் நிலத்தை
கண்டவுடன் தொட வரமின்றி
பார்த்து கதறியே அழுதிருந்தேன்!

என் தாயே எனை சுமக்குமுன்னே
என்னுயிரே!உன் நிலம் தான்
என்னை சுமந் தம்மா.! குலவிளக்கே
எனையிங்கு ஏற்ப்பா யம்மா!

மண்விட்டு நான் போக
தங்கமே!மரணநாள் மட்டும்
அதுநிகழும்!
மங்கையே! உனைவிட்டு
போகுமானால்
தரித்திரம் தான் என்பின்னே
தொடரும்!!

உனையிங்கு குளிர வைக்க
மழையடிக்கடி வந்து போவதாலே
நிலமகளே!வான் பார்த்து
மகிழ்ந்திருப்பேன் நான் நன்றிதினம்
கூறுவதாலே!!

கதிர்வந்து பாயுகின்ற வயலினிலே
ஒளிவிளக்கே! ந

மேலும்

Ijaz R Ijas - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 1:36 pm

எந்த கிரகத்தில் இருக்கிறோமோ.?
இந்த கிரகம் பிடித்து ஆட்டுகிறது,
வாடிய பயிரைக் கண்ட போது
வாடிய காலமெல்லாம்
வழக்கத்தில் இல்லை..!!

பசி போக்கிய வயலின்
பல்லைப் பிடித்துப் பாரத்து
பங்கு வைப்பது சரியா...??
அடிமையாகி பிழைப்பதற்கு
அடி வயிற்றில் அடிப்பது முறையா..??

பச்சைப் புல் என்பது
பச்சக் குழந்தைக்கு சமம்..!!
பிஞ்சு புல்லுக்கு
நஞ்சு உரமிட்டு
நட்டு வைப்பதற்கு பதில்
நசுக்கி கொலை செய்வது மேல்...!!

விளை நிலங்கள் இப்போது
வெறும் நிலமல்ல ,
ரசாயன விசம் தூவிய
மண்புழுக்களின்
சுடுகாடுகள் ...!!

முண்டாசு கட்டிய விவசாயியோ
முக்காடு சாத்திக் கொண்டான்,
முப்போகம் விளைந்த வயலும்
மலடி

மேலும்

தம்பி... மிக அருமை.. எப்போதும் போல கருவிற்கு ஏற்ற வரிகளில் கவிதை கலங்கடிக்கிறது... எல்லோரும் படிக்க வேண்டிய படைப்பு அல்ல இது உணர வேண்டிய படைப்பு... வாழ்க்கை எங்கிருந்து ஆரம்பிக்கிறது எதில் சென்று முடிகிறது என்று இன்னும் தெரியாத சமூகம்தான் இந்த வயலையும் வாழ்வியலையும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்... அதிலும் // நிலம் தின்னிகள்...// நல்ல புதுமையான சொற்றொடர்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... பாரத்து = பார்த்து ? மலடியாகி = மலடாகி ? (மலடியாகி என்பது ஒரு பெண்ணைக் குறித்து விடும். மலடாகி என்பது பொதுவானவை ) 20-Jun-2015 1:46 am
கவனிக்க வேண்டிய வரிகள் ,,,,,,,,,,,,,,,,,,,,, 19-Jun-2015 3:10 pm
உண்மை வரிகள் ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் ......... 19-Jun-2015 2:50 pm
அசத்தல் மனோ....ஏறு பூட்டிய விவசாயின் அவல நிலையை விலை நிலங்களின் போக்கை கண்ணீரோடு எடுத்துச் சொல்கிறது படைப்பு........கலங்கினேன்...... 19-Jun-2015 2:27 pm
Ijaz R Ijas - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 4:02 am

சீதனம் வாங்கி திருமணம் முடித்து
==சீர்மிகு அன்பை எதிர்பா ராதே!
வேதனம் கொடுக்கும் முதலா லியன்பை
==விசுவா சித்து ஏமா றாதே!
காதலாய் உருகும் கணிகையர் நடிப்பை
==கண்ணகித் தனமாய் கண்கொள் ளாதே!
பாதகத் தனங்கள் பாரினில் ஆயிரம்
==பார்த்து அறிய மறந்து விடாதே!

நூதனக் கொள்ளை காரரின் முன்னே
==நுணல்போல் வாயால் கெட்டு விடாதே!
கூதலுக் கேற்றப் போர்வை என்றே
==குடிக்கும் பழக்கம் கொண்டு விடாதே!
ஈதல் நலமே என்னும் நினைப்பில்
==இருப்பதை எல்லாம் இழந்து விடாதே!
வாதம் வம்பு பண்ணிப் பண்ணி
==வருங்கா லத்தை சிதைத்து விடாதே!

பேதமை வளர்க்கும் பேய்களை நம்பி
==பேரிடி தன்னை வாங்கி விடாதே!
சோதனை

மேலும்

எழுச்சியூட்டும் வரிகளில் எட்டுத் திக்கும் வீசும் காற்றாய் கவிதை மனம் வீசி செல்கிறது... மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 2:09 am
மரபை தொட முயன்ற புது கவிதை அருமை 19-Jun-2015 12:37 pm
தத்துவக் கிடங்காய் கவி ! ஐயா கண்ணதாசன் வரிகளைப் படித்த நிம்மதி ! 19-Jun-2015 12:10 pm
Ijaz R Ijas - Ijaz R Ijas அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2015 9:45 am

காதலன் ஒருவனை நம்பியதால்
கண்ணீரில் வாழ விட்டான் என்னை.
கண்ணி நானும் மனைவியாகவே
ஆசையுற்றேன் - இன்றோ
மணல் குழியை தேடிப் போகிறேன்!!


காதலன் மேல் பற்று கொண்டே
உறவையும் வெறுத்து விட்டேன் -பாவி, அவன் என்னை கற்பழித்தே
விட்டுவிட்டான்.
நானோ தீயிலே கருகிய
தேன்மலர் ஆனேன்,
நெருப்பிலே எரிந்த கவிதை ஆனேன்.!


ஊர் முழுதும் மாற்றி விட்டார்கள்
எந்தன் பெயரை வேசி என்றே!சில
பேர் விதவை என்று திருத்தி சொன்னார்!
மனத்திரையில் அடக்கி வைத்த
கண்ணீர் இன்று, இமைக் கதவை
உடைத்து விட்டே அணைகளானது!
பூங்கிளி பறந்த வந்த திசைகள்
இன்று புயலி

மேலும்

மிக நன்றி!உங்கள் வாழ்த்துகள் என்னை தூண்டுகிறது எழுத!!♥♥ 18-Jun-2015 2:33 pm
மிக மிக அருமை வாழ்த்துகள் 18-Jun-2015 1:58 pm
மனமும் விழியும் துடி துடித்து வாடியது வலியில் மலர்ந்த சிந்தைக் கவியே!! உன் வரிகள் என்றும் வேண்டும் எழுத்துக்கவியே!! 18-Jun-2015 1:48 pm
nandri sissssssss 18-Jun-2015 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
இராமகிருஷ்ணன் வெ

இராமகிருஷ்ணன் வெ

கிருஷ்ணகிரி
நா சேகர்

நா சேகர்

சென்னை
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்

இவர் பின்தொடர்பவர்கள் (52)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (52)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே