என் தாய்வீடே

தமிழகமே!! பொன்வீடே!!

கரு விட்டு நான் வந்த நாளினிலே
பொன் தாயே!உன் நிலத்தை
கண்டவுடன் தொட வரமின்றி
பார்த்து கதறியே அழுதிருந்தேன்!

என் தாயே எனை சுமக்குமுன்னே
என்னுயிரே!உன் நிலம் தான்
என்னை சுமந் தம்மா.! குலவிளக்கே
எனையிங்கு ஏற்ப்பா யம்மா!

மண்விட்டு நான் போக
தங்கமே!மரணநாள் மட்டும்
அதுநிகழும்!
மங்கையே! உனைவிட்டு
போகுமானால்
தரித்திரம் தான் என்பின்னே
தொடரும்!!

உனையிங்கு குளிர வைக்க
மழையடிக்கடி வந்து போவதாலே
நிலமகளே!வான் பார்த்து
மகிழ்ந்திருப்பேன் நான் நன்றிதினம்
கூறுவதாலே!!

கதிர்வந்து பாயுகின்ற வயலினிலே
ஒளிவிளக்கே! நல்பயிர்தான்
பூக்குதம்மா!
காலையிலே உன் மடியில் துயில்
கொண்டு பார்த்திருந்த பயிர்கள்
எல்லாம் அம்மம்மா!அழகம்மா!

கடல்அளவு தண்ணீரை தருவதாலே
கடல்கன்னியே! உன் வீட்டில் நான்
அடிமையம்மா!
காரணமும் கேட்காமல் எனையிங்கு
வளர்த்ததாலே உனக்குநான்
இடுகிறேன் நிழலம்மா மரம்மம்மா!

ஏழை என்ற பாகுபாடு
ஒற்றமைதாயே!உன் அரங்கில்
இல்லையடி!
எந்தமனம் வந்தாலும் வந்தவரை
வாவென்பதுன் குணமடி!

சொந்த மண்ணை மறந்துவிட்டு
தெய்வீகமே! உனக்கு தோரகம்
தான்செய்கின்றார்!
அன்னவரை நீ மறுபடி தோளேற்றி
சுமப்பதால்தான் அவர்
உனையிங்கு மிதிக்கின்றார்!

கரியமனம் நாட்டினிலே பலஉண்டு
என்நிழலே!நீ அறிவாயம்மா!
கண்டுவந்து செய்திருந்த தவறை
எல்லாம் உன்மழையால் நீ
கழுவாயம்மா?

உன்னை போல் வாழ்வதற்க்கு
புதுவிளக்கே!நான் என்னதவம்
செய்யவேண்டும்??
உனை பார்த்து வாழ்ந்ததாலே
போதும்மம்மா!இந்ததவம்!
இனிஎன்னதான் வேண்டும்?!

எழுதியவர் : (13-Feb-16, 8:01 am)
பார்வை : 122

மேலே