மௌனம்
சொற்கள் இல்லாத சிக்கனப் புத்தகம்.
சொல்ல முடியாத தொடராய் தொடரும் வாக்கியம் .
ஒளியும் இருளும் கலந்த குகை.
ஓராயிரம் உணர்ச்சிகளைப் புதைக்கும் புதைகுழி.
உலையாய்க் கொதிக்கும்உள்ளத்தின் மூடி.
உண்மை உணர்த்தும் போதி மரம்.
அறிவெனும் அறியாப் பொருளின் விகுதி.
ஆரவாரங்கள் அறியாத அமைதி.
வார்த்தைகள் அற்ற உணர்வுகளின் சுரம்
வாழ்க்கையை அறிய
எம்மிடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஒரு வரம்.