விவசாயம்

மாரிச்சாமி ஒருத்தர்
மாண்டபோன கதகேளு!
மனசுக்குள்ள சோகத்த
மறச்சுவச்ச கதகேளு!

மண்டியிட்டு புடிச்சாரே
மத்தவங்க காலதான்
புடிச்சென்ன பலனய்யா?
தீரலையே சோகந்தான்!

உச்சிவெயில் அடிக்கையில
உசுருகொஞ்சோ நோகையில
பெத்தவள படிக்கவக்க
உழைச்சாரே விவசாயி!

உழைச்சுத்தான் பார்த்தாரு
பணங்காசோ சேரலையே!
கடன்வாங்கி பார்த்தாரு
வட்டிகூட குறையலையே!

மூட்டமூட்ட நெல்லெடுத்து
ஒதுக்கிவச்ச நேரத்துல
வந்ததம்மா மழையம்மா!
நனைச்சதம்மா மூட்டையில!

பேஞ்சுகெடுத்த மழையில
நனைஞ்சுருச்சே நெல்மூட்டை
வெட்டியா பூத்து
முளைச்சுருச்சே நெல்மூட்டை!

பட்டகடன் அடைக்கவே
பாடுபட்ட விவசாயி
மூட்டகூட நனைஞ்சுருச்சே
இனியென்ன கருமாயி!?

நெல்மூட்ட நம்பியே
கனவுகண்டார் மாரிச்சாமி
கெட்டவிதி கண்டுகொண்டு
கேக்கலையே ஒத்தசாமி!

யாருக்குந் தெரியாம
இராத்திக்கு இராத்திரியே
பொஞ்சாதி புள்ளைய
பாத்திவிட்டு போனாரு

மனசுக்குள்ள சோகத்த
மறச்சுவச்சு மறச்சுவச்சு
கிளமேல தூக்குபோட்டு
மூச்சுமுட்ட இறந்தாரு!

எழுதியவர் : (20-Dec-16, 10:38 pm)
பார்வை : 97

மேலே