இராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இராஜ்குமார்
இடம்:  திரு ஆப்பனூர்
பிறந்த தேதி :  19-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  855
புள்ளி:  123

என்னைப் பற்றி...

புதிய வானத்தின் பழைய பறவை நான்

என் படைப்புகள்
இராஜ்குமார் செய்திகள்
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2017 10:22 pm

அன்பின் பிறப்பிடமாய்
அனைவரையும் ஆள்பவள்..!

இதயமுள்ள இறைவனாய்
இல்லத்தை காப்பவள்..!

உயர்வான தியாகத்தின்
உருவமாக திகழ்பவள்..!

கருணையின் கனிமுகமாய்
கடைசிவரை வாழ்பவள்..!

எல்லாம் அன்னையே..!!!

மேலும்

நன்றி அண்ணா 14-Dec-2017 8:01 pm
நன்று இராஜ்குமார்.. 14-Dec-2017 7:54 pm
தங்கள் வளமான கருத்திற்க்கும் வலிமையான வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா 14-Dec-2017 12:34 pm
உயிரை மரணத்தின் பிடியில் அடமானம் வைத்து இன்னொரு உயிரை ஜென்மமாய் பெற்றெடுப்பவள் தான் அன்னை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 12:31 pm
A JATHUSHINY kesha அளித்த படைப்பில் (public) jathu kesha59434f834055f மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Dec-2017 5:44 pm

பாசத்தை கொட்டிக் கொட்டி பழகிய இதயங்கள்தான் பாவப்பட்டவை.

வேசத்தை அளந்து பார்க்கத் தெரியாமல்.

வெற்றுக் கடதாசி போல் கசக்கித் தூக்கி வீசப்படுகின்றன......

இப்படிக்கு,
எறியப்பட்ட கடதாசி.

மேலும்

நன்றி அண்ணா.... மகிழ்சி..... கருத்தில் மிக்க மகிழ்ச்சி 12-Dec-2017 7:12 pm
அதிகமான பாசங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தருவது வேதனைதான்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் நட்பே 12-Dec-2017 1:29 pm
நிச்சயமாக அண்ணா ..... மிக்க நன்றி. கருத்தில் மகிழ்கிறேன் 10-Dec-2017 8:25 pm
உண்மையான அன்பை வேஷம் என்று வெறுக்கும் போதே உள்ளம் துடிப்பதை நிறுத்தி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2017 7:29 pm
இராஜ்குமார் - sahulhameed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2017 6:22 pm

காதலென்னும் கோட்டைக்குள்ளே
உன்னைக் கொண்டு சேர்ப்பேனே!
வானிலுள்ள நிலவைக் கொண்டு
தூங்கும் மெத்தை செய்வேனே!
ஆக்ஸிஜன் போலவே நான்
உன்னுள்ளே இருப்பேனே!
மேகத்தை உடைத்து உன்
தலையனையாய் தருவேனே!

மேலும்

நன்றி இராஜ்குமார் சகோதரா 12-Dec-2017 10:19 pm
அருமை சகோதரா 12-Dec-2017 1:24 pm
நன்றி தோழியே 11-Dec-2017 9:53 pm
ஆக்ஸிஜன் போலவே நான் உன்னுள்ளே இருப்பேனே! புதுவிதமான வரிகள் .....இன்னும் எழுத வாழ்த்துக்கள் .... 11-Dec-2017 11:38 am
ஆரோ அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2016 8:59 pm

கோடை கதிர் அவன்
ஓடவிட்டான்
மேலிருந்து கீழாக‌
ஆடைக்குள் ஓடையை;

வெப்பகாற்றும் வேகமாய்
பாய்ந்து
ஈரக்குலையின் ஈரமும் காய்ந்தது;

மலிவுகட்டண மாநகரபேருந்துக்காய்
மாநாட்டு கூட்டமாய்
மக்கள்
எண்ணெய் தொய்ந்த முகத் 'ஓடு'

நின்ற கூட்டத்தில்
வெந்த கிழவன்
கும்பிட்டு கொண்டானோ.......?!
இரைதேட‌
ஈயக்கம்பியில் பூமிதித்த காகம்
பொறுக்காமல்
கதரி கரைந்ததோ....?!
கோடை விடுப்பில்
குதுகலமான‌
மட்டைபந்து விளையாட்டை
முட்டு கட்டை போட்ட வெயிலை எண்ணி
தன் ஏட்டு மேகத்தை
குழந்தை ஏக்கதில் தொட்ட‌தோ......?!!?

பசிக்கு வீசிய தானியமாய்
பக்தன் உடைத்த தேங்காயய்
பல துளிகளாய் மேகத்தண்ணீர் சிதற‌
வெயிலுக்கு

மேலும்

மிக்க நன்றி தம்பி...( உங்களுக்கும் உங்கள் கருத்திற்கும் ) 12-Dec-2017 2:06 pm
மண்ணை நனைக்கும் மழையே போலவே மனதை நனைத்த வரிகள்...அருமை வாழ்த்துக்கள் அண்ணா 12-Dec-2017 1:22 pm
வெகுநாள் கழித்து என்படைப்புக்கு பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் மனம் மகிழ் நன்றிகள். 05-Dec-2017 11:04 am
இனம் புரியாத ஒவ்வொரு பொழுதும் அஸ்தமனத்தின் ஓர் அனுபவத்தைக் கற்றுக் கொள்வதைப் போல வாழ்க்கையும் சின்னச் சின்ன மழைத்துளிகளில் கடலளவு யதார்த்தம் நிறைந்த வாழ்க்கையை கற்றுக் கொள்ளத்தான் செய்கிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 7:29 pm
இராஜ்குமார் - கௌரி சங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2017 8:37 am

செவ்வான பொழுதில்
செம்மையான தென்றலில்
நினைவில் மறைந்தோடும்
வர்ண காலங்களில் - என்
மழலை இசையில்
செவி சாய்த்துக் கொண்டு
என் தந்தையின் கையை பிடித்து
நடந்த நாட்களை
நினைக்கையிலே நிமிசங்கள் தித்திப்பாகும்
காலங்கள் கவிபாடும்......
என் தந்தையோடு ஒரு தருணம்
அந்த பாசம் எப்பொழுதும் என்னுடன்
வரணும்..............
- கௌரி சங்கர்

மேலும்

நன்றி உங்கள் கருத்திற்கு......... 12-Dec-2017 7:53 pm
En thanthaiyodu oru tharunam meendum varavendum .......arumai 12-Dec-2017 7:03 pm
நன்றி நண்பா.... 12-Dec-2017 6:27 pm
தந்தையின் அன்பை சொல்ல மொழிகள் பற்றது...வாழ்த்துக்கள் நண்பா 12-Dec-2017 1:19 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 12:53 am

மாட்டி தவிப்பவன் மனிதனென்று
மாட்டு மூளைக்கு தெரியவில்லையா..!
மானங்கெட்ட தமிழக அரசே
மனதில் உமக்கு ஈரமில்லையா..!

வாக்கு உமக்கு தேவைப்பட்டால்
வாசல் தேடி வருகின்றாயே..!
வடியும் கண்ணீர் வற்றவில்லை
வருத்தம் போக்க நேரமில்லையா..!

போட்டி போடும் தேர்தலுக்காக
போன உயிரே மறந்துவிட்டாயா..!
போன மீனவர்கள் ஏழையென்று
போனால் போகட்டும் நினைத்துவிட்டாயா..!

நீங்கள் நினைத்தாலும்
ஆச்சரியமில்லை
நீதி செத்த நாட்டினிலே..!
இயற்கை மீது பழிபோட்டு
இரங்கல் செய்தியும் சொல்லுவீர்கள்..!
இலவச ஆசையே தூண்டிவிட்டு
இனியும் ஏமாற்ற எண்ணுவீர்கள்..!

தமிழா விழித்துக்கொள்..!!!
தலையெழுத்தை மாற்றிக்கொள்..!!!

மேலும்

தங்கள் வளமான கருத்திற்க்கும் வலிமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா 12-Dec-2017 1:07 pm
குப்பைகளை அள்ளிப் போடக்கூட இங்கு ஏழைகள் உண்டு ஆனால் அந்த ஏழைகளை அள்ளிப் போடத்தான் நாதிகள் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 10:21 pm
தங்கள் வளமான கருத்திற்க்கும் வலிமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா 11-Dec-2017 10:07 pm
அரசியல். தேர்தல் நேரத்தில் தேவைப்படும் மக்களை ஆட்சிக்கு வந்த பின்பு அடியோடு மறந்து போகும் அக்கறையில்லா அமைப்பு இது. அருமை..அருமை ...அசத்துற ராஜ்குமார். 11-Dec-2017 9:55 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2017 8:43 pm

அத்தை பெத்த அல்லிமலரே
அன்பு காதலன் நான்தான்டி..!
அந்திவான வெள்ளி நிலவாய்
அலைகிறேன் உனை வேண்டி..!

மனமகளாக உனை நினைத்து
மனம் முடிக்க நினைக்குறேன்டி..!
மனைவியாக வருவாய் என்று
மனதில் ஆசையே விதைக்குறேன்டி..!

உன் கண்ணில் எனை பார்க்க
என் கண்கள் கடவுளே வேண்டுதடி..!
உன் கனவில் நான் இருக்க
என் கவிகள் கடலாய் பெருகுதடி..!

உன் இமையின் இசை கேட்க
என் இதயத்தில் ஆர்வம் வெடிக்குதடி..!
உன் இதழின் பசி போக்க
என் இதழ்கள் ருசிக்க துடிக்குதடி..!

ஆதி முதல் அந்தம் வரை
என் ஆயுள் ரேகை நீதான்டி..!
ஆமாமென்று நீ சொன்னால்
ஆதாம் ஏவாலும் நாம்தான்டி..!

ஆமாமென்று நீ சொன்னாள்
ஆதாம் ஏவாலும் நாம்தான்ட

மேலும்

மிக்க நன்றி அண்ணா 10-Dec-2017 3:29 pm
சிறப்பு மிக சிறப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 10-Dec-2017 3:04 pm
மிக்க நன்றி அண்ணா 09-Dec-2017 5:56 pm
வாழ்த்துக்கள் அருமையான வரிகள்... 09-Dec-2017 5:51 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2017 2:57 pm

மழை செய்யும் மகத்தான சேவைக்கு
மனிதன் கைமாறு செய்ய முடியாது..!
மலையளவு உன் மறைமுக உதவியே
மதிப்பு சொல்ல எவராலும் முடியாது..!
சிலையாய் இருக்கும் கடவுளே கூட
சில நேரம் நினைக்க முடியாது..!
அலையாய் தொடரும் உன் நட்பே
அனு அளவும் மறக்க முடியாது..!

நண்பேன்டா..!!!

மேலும்

மிக்க நன்றி சகோதரி 10-Dec-2017 3:32 pm
மிக்க நன்றி அண்ணா 10-Dec-2017 3:32 pm
நல்ல நண்பன் நல்ல வாழ்க்கையின் அர்த்தம் வாழ்த்துக்கள் 10-Dec-2017 3:09 pm
அலையாய் தொடரும் உன் நட்பே அனு அளவும் மறக்க முடியாது..! அருமை ...வாழ்த்துக்கள் 09-Dec-2017 9:26 am
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 8:31 pm

கதிரவன் கைபட்ட காலை நேரத்தில்
கன்னட காவேரி கரையோரத்தில்
கடக்கும் கலியுக தூரத்தை
கண் திறந்து கனவு கண்டேன்
கனவில் ஆறும் வந்தது
கண்ணில் நீரும் வந்தது...
ஆம்
ஆறு அடி வளர்ந்து என்னபயன்
ஆறு அறிவு பெற்று என்னபயன்
ஆறின் குணம் அனு அளவும்
வரவில்லையே எனக்கு,.!
ஓய்வது சமுத்திரம் என்றாலும்
ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு
சாய்வது சமாதி என்றாலும்
சாகும் வரை சாதனை படைப்பது யாரு..?

மேலும்

மிக அருமை நட்பே வாழ்த்துக்கள் 26-Jul-2017 3:25 pm
மிக்க நன்றி சகோதரி 25-Jul-2017 1:37 pm
ஓய்வது சமுத்திரம் என்றாலும் ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு அழகிய வரிகள்... 24-Jul-2017 2:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (117)

ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb

ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb

காமயகவுண்டன் பட்டி
JEKA

JEKA

சென்னை
IswaryaRajagopal

IswaryaRajagopal

Kanyakumari
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (117)

இவரை பின்தொடர்பவர்கள் (119)

மேலே