ஜீ நான் ஒரு கவிதை சொல்லட்டுமா
உதயம் தரும் சூரியனாய்
உலகே ஆண்டது தமிழ்மொழி..!
உன்மை வரலாறு தெரியாமல்
உறவும் இதனை மறுக்கலாமா..!
இமயம் முதல் குமரி வரை
இனிதே வாழ்ந்த தமிழர் நாம்
இதயமற்ற இரும்பு மனதால்
இதனை இன்று மறக்கலாமா..!
ஆண்ட தமிழில் ஆரியம் கலந்து
தீன்டதகாத சாதியே விதைத்து
வேண்டிய வளங்களே பெற்றுக்கொண்டு
வேதனை நமக்கு தந்து மகிழ்ந்தான்..!
பெய்யும் மழையே முன்பே கனித்து
பெருமை பெற்றது தமிழன் ஜோதிடம்..!
பரிகாரம் என்ற பொய்யே வைத்து
பணத்தை பெற்றான் ஆரியன் நம்மிடம்..!
உழைப்பு இல்லாமல் ஊதியம் பெற்றான்
உழைப்பவன் ஏமாற உண்டியல் வைத்தான்
பிழைக்க ஆயிரம் வழி இருந்தும்
பிரார்த்தனை பெயரில் பிச்சை கேட்டான்..!
அரக்கன் என்று நம்மை சொன்னான்
அரசன் என்று அவனே சொன்னான்
இரக்கமில்லா கற்பனை கொண்டு
இதிகாசம் ஒன்றை எழுதி வைத்தான்..!
பெண்ணியம் காத்த தமிழனின்
பெருமை அனைத்தையும் சிதைத்துவிட்டான்..!
கண்ணியமில்லா மனிதன் ஒருவனே
கடவுளென்று நம்ப வைத்தான்..!
அன்னிய மொழியே ஆலயத்தில் வைத்தான்
அன்னை தமிழில் அர்ச்சனை மறுத்தான்
புண்ணியம் தேடும் தமிழர்களுக்கு
புரிந்திடுமா இந்த நிலை..!
புண்ணியம் தேடும் தமிழர்களுக்கு
புரிந்திடுமா இந்த நிலை..!!!