கண்ணன் கீதம்

காயாம்பூ வண்ணத்தான் கதிர்மதிய முகத்தான்
மாயன் மணிவண்ணன் ஆயர் குலத்தில்
வந்துதித்தான் வேய்ங்குழல் ஊதி வெகுநேர்த்தியாய்
ஆவினங்கள் மகிழவே கானகம் சென்று
மேய்த்து வந்தான் ஆயர் மகளிர் மனம் எல்லாம்
நிறைந்து மகிழ்ந்திடவே குரவைக் கூத்தும் ஆடினான்
பாலகனாய்க் குன்றேந்தி காவலனாய்க் காத்தான்
கடிய பெரும் பாம்பின் கொட்டம் அடங்க
காளிங்க நர்த்தனம் ஆடிய பெருந்தகை
உலகோர் மகிழ்ந்திட தஞ்சை வீழ்த்தி மாய்த்தான்

பின்னர் பாரதப் போரில் ஐவருக்கு துணைநின்று
அவர்கட்க்கு எண்ணிலா துயர் தந்த
கௌரவரை கூண்டோடு மாய்த்திடவே வழிவகுத்தன
மண்ணில் மாந்தர் இனிதாய் வாழ்ந்து
பேரின்பமாம் அவ்வுலகும் நாட கீதையாம்
உயர் வேதத்தையும் தந்தான் எம்மான்
நான் என்றும் போற்றி வணங்கும்
கண்ணனாம் கறு மாணிக்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Nov-24, 10:14 am)
பார்வை : 34

மேலே