தெரு நாய்கள் படுத்தும் பாடு

அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு
தைரியமாய் நடந்து சென்றால் பின்னாலேயே வந்திடும்
பயத்துடனே நடந்து சென்றால் முன்னாலேயே குந்திடும்

(அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு)

ஐம்பது ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம்
நண்பனின் வீட்டினில் அண்ணனுக்கு அனுபவம்
வாலாட்டும் நாய் எதிரில் அவன் காலை ஆட்டினான்
கொதித்தெழுந்த நாய் கடிக்க வீட்டிலிருந்து ஓடினான்

(அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு)

ஆஸ்பத்திரி சென்று அண்ணன் மருத்துவரிடம் காட்டினான்
தடுப்பூசிகள் போட்டுகொண்டு அதற்குப் பணம் கட்டினான்
இன்று கூட நாயைக்கண்டால் எனக்கும் மனசு பட பட
தெருநாய் பக்கம் வந்துவிட்டால் தொடைகள் நடுங்கும் வெட வெட

(அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு)

ஓரளவு தைர்யமான சராசரி மனிதன் தான்
தெருநாய்கள் அருகில் வர நடுங்குவது சகஜம் தான்
நடையைத் தவிர்த்து நானுமே கார் ஊர்தியில் செல்கிறேன்
காரைத் துரத்தி ஓடிவந்து முறைக்குதய்யா சொல்கிறேன்

(அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு)

எனக்கு மட்டும் இல்லையப்பா அனைவருக்கும் பொருந்துமே
நாய்கள் கூட்டம் தெருவில் கண்டால் எவருக்குமே அச்சமே
நூற்றுநாற்பத்தைந்து கோடி இந்தியாவின் ஜனத்தொகை
அதைப்போல நாலு மடங்கு தெருநாய்களின் ஜனத்தொகை

(அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு)

எந்த நாய் எப்போது குரைக்கும் கடிக்கும் தெரியாது
கோடி மக்கள் நாய்ப்பாட்டினை சொல்லியே மாளாது
நாய்களுடன் நாம் வாழ்கிறோம் செய்வது அறியாது
நாய் அகற்றச் சட்டமின்றி நாய்க்கடி முடியாது

அன்று தொடங்கி இன்றுவரையில் நாம் படுகின்ற பாடு
கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு நாய்கள் படுத்தும் பாடு

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Nov-24, 5:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 21

மேலே