பாவி நான்

பாவி நான்.

இறைவா
என்னை அடி
என்னை உதை
என் மேல்
ஏறி நின்று
என்னை மிதி.

என் ஆவி
அகலும் வரை
என் மேல்
ஏறி நின்று.... இறைவா
என்னை மிதி.

இறக்கும் போது உன் காலடியில்
நான் இருந்தேன்
என்று நான் மகிழ
என் மேல்
ஏறி நின்று... இறைவா
என்னை மிதி.

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (7-Nov-24, 2:46 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : paavi naan
பார்வை : 69

மேலே