அப்துல் கலாம் பிறந்த நாள் நேற்று

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அப்துல் கலாம்

படகு விடும் எளிய சமுதாயத்தில் பிறந்தார்
பெரிய குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்தார்
தினசரி நாளிதழ்களை விற்று சம்பாதித்தார்
சராசரி மாணவனாய் கல்வியை பயின்றார்

கணிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தார்
விஞ்ஞான கல்வியில் கவனம் செலுத்தினார்
விண்வெளி கல்வி சென்னையில் பயின்றார்
போர்விமானி ஆவதற்கு ஆவலாக இருந்தார்
மருத்துவ சோதனையில் தோல்வி கண்டார்

பாதுகாப்பு துறைக்கு சென்று பணிபுரிந்தார்
விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்தார்
அணுஆய்வு துறையில் சிறந்து விளங்கினார்
ஏவுகணை வடிவமைப்பு சிறப்பாக செய்தார்

ப்ரித்வி ஏவுகணைகள் வடிவிற்கு பாடுபட்டவர்
பிரதமமந்திரி அலுவலக விஞ்ஞான ஆலோசகர்
2002 -2007 ஐந்து வருடங்கள்நாட்டின் ஜனாதிபதி
மக்களின் ஜனாதிபதி என்று போற்றப்பட்டவர்

அனைத்து மதங்களை மதித்து போற்றியவர்
கர்நாடக இசையை அனுதினமும் கேட்டவர்
வீணை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்
சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்தவர்

அவர்மேல் கடும் விமரிசனங்கள் எழுந்தது
அவற்றை பெருந்தன்மையுடன் சந்தித்தார்
மீண்டும் ஜனாதிபதி விருப்பம் கொண்டார்
மூன்று நாட்களில் ஆசையை நிராகரித்தார்

இறுதிவரை மணம் செய்யாமல் வாழ்ந்தார்
எளிமைக்கு ஒரு உதாரணமாய் வாழ்ந்தார்
இளைய தலைமுறை சிந்திக்க வித்திட்டார்
இந்திய இளைஞர்களின் ஆதரவு பெற்றார்

ஜனாதிபதிகள் பலர் இருந்தனர் சென்றனர்
அப்பதவியின் மதிப்பை கலாம் கூட்டினார்
2015 இல் அசாம் மாநிலத்தில் காலமானார்
நாம் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டினார்!

நேற்று அன்னாரின் பிறந்த தினம்!
16 .10 .24

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Oct-24, 2:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 17

புதிய படைப்புகள்

மேலே